Home » » Formula One Race American Circuit மீது Google Street View மூலம் நீங்களும் ஓடி பாருங்கள்

Formula One கார் பந்தயங்கள் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது. பார்முலா 1 (Formula 1 or F1) ஆண்டு தோறும் நடைபெறும் single seater auto racing  தொடராகும். இப்பந்தயங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA (Fédération Internationale de l'Automobile) எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோரும் சுமார் 11 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இரண்டு ஓட்டுனர்கள் பங்கு கொள்வர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுனர் பெறும் இடத்தைப் பொறுத்து அவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். தொடர் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் ஓட்டுனருக்கு ஓட்டுனர் ChampionShip பட்டம் வழங்கப்படும்.


Formula One Race  போட்டிகள் உலக அளவில் 600 மில்லியன்million  தொலைக்காடசி பார்வையாளர்களால் பார்க்கப்படுகின்றன. இப்போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகின்றன. இதன் வருடாந்திர செலவுப் பட்டியலும் நடத்தும் அமைப்பினுக்கான அரசியலும் ஊடகங்களால் பெருமளவு கவனிக்கப்படுகின்றன. இத்தகைய கவனிப்பும் இதன் புகழும் இப்போட்டிகளுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கின்றன.

Google streetview உதவியுடன் F1 இன் அமெரிக்க ஓட்ட பாதைகளை கீழே சுற்றி பாருங்கள்.