இன்னும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில மணி நேரங்களே உள்ளது. இந்த ஒலிம்பிக் நடைபெற போகும் ஒலிம்பிக் லண்டன் மைதானங்களை ஒருதடவை பாருங்கள். எத்தனை அழகு>>>> சில தினங்களுக்கு முன்பு கூகிளால் எடுக்கப்பட்ட இந்த ஸ்ட்ரீட் view லண்டன் மைதானங்களின் ஒட்டு மொத்த அழகையும் பிரதி பலிக்கிறது. நாமும் ஒரு தடவை சென்று பார்க்க மாட்டோமா என்ற ஆவலை தூண்டு கின்றன. அத்துடன் நீங்கள் முப்பரிமாண கண்ணாடிகளை வைத்து இருப்பின் right click செய்து 3Dநிலையிலும் இவற்றை கண்டு களிக்கலாம். அது தவிர நேரடியாக போட்டிகளை கண்டு கழிக்க எமது தளத்திலும் youtube ஊடாடு நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உலகம் முழுவது கோடிக்கணக்கான மக்கள் இதை காண முயற்சிக்கலாம் என கூகிள் எதிர் பார்க்கிறது. இதனால் live streaming severs சிக்கலில் சிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டு உள்ளது.
இந்த ஒலிம்பிக் மைதானங்கள் பற்றி சில :
இது 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் முதன்மை மையமாக வடிவமைக்கப்படுகிறது; தடகள விளையாட்டுக்களும் ஒலிம்பிக் திறப்பு விழா, இறுதி விழா நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. இது இலண்டன் மாநகரின் கீழ் லீ பள்ளத்தாக்கில் இசுட்ராஃபோர்டு மாவட்டத்தில் மார்ஷ்கேட் லேனில் அமைந்துள்ளது.இந்த விளையாட்டரங்கில் ஏறத்தாழ 80,000 பார்வையாளர்கள் விளையாட்டுக்களைக் கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பிறகு இதன் பார்வையாளர் அளவு குறைக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக இது பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது.2017ஆம் ஆண்டு தடகள சாதனையாளர் போட்டிகளுக்கு இந்த விளையாட்டரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டின் மத்தியிலிருந்தே நில கையகப்படுத்தும் பணி துவங்கினாலும் அலுவல்முறையாக மே 22, 2008இல் கட்டிட வேலைகள் துவங்கின.
இப்போது சுற்றி பார்ப்போமா?
Wembley Stadium
Wembley Stadium
Horse Guards Parade (Beach Volleyball)