Home » » வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம். இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம். அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம். இணையதள முகவரி




வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம்.சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம்.
இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம்.
அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம்.
அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும்.
பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம்.
இணையதள முகவரி