Home » » இந்த வார இணையதளம் பி நோட்ஸ்

ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி இருந்தோம். மானிட்டரின் டெஸ்க்டாப் பகுதியில் நம் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய செய்திகளை, சிறு கட்டங்களில் எழுதி வைப்பதனையே ஸ்டிக்கி நோட்ஸ் என அழைக்கிறோம். பி.டி.எப்.பைல்களில் இது முதலில் பழக்கமாயிருந்தது. இந்த ஸ்டிக்கி நோட்ஸ் வகையில், புதிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புரோகிராம் பி நோட்ஸ் (P Notes).
ஸ்டிக்கி நோட்ஸ் புரோகிராம் கொண்டுள்ள அதே கட்டமைப்பினையே பி நோட்ஸ் புரோகிராமும் கொண்டுள்ளது. ஆனால் பல புதிய வசதிகள் இணைக்கப் பட்டுள்ளன. பி நோட்ஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. இதற்கான ஸிப் பைலை, இதன் இணைய தளத்திலிருந்து இறக்கி, விரித்தால் போதும். எனவே இதனை ஒரு பிளாஷ் ட்ரைவில் கொண்டு சென்று, எந்தக் கம்ப்யூட்டருக்கும் கொண்டு சென்று பயன்படுத்தலாம்.
இதனை இயக்கியவுடன், இதற்கான ஐகான் ஒன்று டாஸ்க் பாரில் காட்டப்படும். இதில் ரைட் கிளிக் செய்தால், இதன் மெயின் மெனு தரப்பட்டு, அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும். இந்த ஆப்ஷன்கள் தரும் வசதிகளைப் பார்த்தாலே, இதன் சிறப்பும் தரும் கூடுதல் வசதிகளும் நமக்குத் தெரியவரும்.
முதலில் “New Note” என்ற பகுதியில் கிளிக் செய்தால், இதில் கிடைக்கும் பார்மட்டிங் வசதிகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. இதன் மூலம் ஒரு நாளில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்ட பல வகைகளில் எழுதி வைக்கலாம். இதில் குறுக்குக் கோடிட்டு அடித்துவிடும் வசதி உள்ளதால், செய்து முடித்த வேலைகளை, குறுக்குக் கோடிட்டு அமைக்கலாம். ஸ்டிக்கி நோட்ஸ் முதலில் வந்த போது இருந்த மஞ்சள் கலரில் இதன் நோட்ஸ் பின்புலம் கிடைக்கிறது.
இந்த புரோகிராமில் ஒரு ஹெல்ப் பைல் தரப்பட்டு, பல விளக்கங்கள் தரப்பட்டி ருப்பது இன்னொரு சிறப்பு.
இந்த பி நோட்ஸ் புரோகிராம் தனி நபர்கள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பார்க்கச் சிறந்த இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளத்தின் முகவரி: http://sourceforge.net/projects/pnotes/