குரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய குரோம் நீட்சி




தற்போது கூகுள் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. அதில் தற்போது புதியதாய் வரும் இன்னொரு புதிய நீட்சி தான் குரோம் தொலைக்காட்சி.
இதுவும் ஒரு extension தான். இதன் மூலம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாடு வாரியாகவும், category வாரியாகவும் பார்க்கலாம்.
முதலில் கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நிறுவி கொள்ளவும். உடனே குரோமில் புதியதாய் ஒரு ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்தவுடன் தொலைக்காட்சி போன்ற உரு தோன்றும்.
அதிலே உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்து பார்க்கலாம். இதை விட நாடு வாரியாக தெரிவு செய்வதெனில் by country என்பதை கிளிக் செய்து விரும்பிய கண்டத்தை தெரிவு செய்து பின் நாட்டை தெரிவு செய்யலாம்.
இணையதள முகவரி


பாதுகாப்பான இணையதளத்தை அறிய வேண்டுமா?

குறிப்பாக எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது.

இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது.

http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல் அந்த தளத்தின் முகவரி கொடுத்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் தரவும்.

அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில் அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும்.

மோசமான தளமாக இருந்தால் அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும்.

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?



அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.
அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது.
இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.
தரவிறக்க சுட்டி