உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு

அனைவரும் இப்பொழுது மின்னஞ்சல் ஐடி அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தில் நுழைய லொகின் ஐடி வைத்திருப்பார்கள்.அதன் கடவுச்சொல் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும். உங்களுடைய கடவுச்சொல்லினை உடைக்க அதாவது ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இந்த தளத்தின் பெயர் How Secure Is My Password? இந்த தளத்தில் உங்கள் கடவுச்சொல்லினை கொடுத்தால் எவ்வளவு நாளில் உங்கள் கடவுச்சொல்லினை கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள்.
ஆனால் இந்த தளத்தில் உங்கள் உண்மையான கடவுச்சொல்லினை கொடுக்காது வேறு ஏதாவது கொடுத்து முயற்சி செய்யலாம்.
இணையதள முகவரி


கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் கோப்புகளை உருவாக்குவதற்கு

பிடிஎப் கோப்புகளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும், சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகின்றன.இவ்வாறு உருவாக்கப்படும் பிடிஎப்  கோப்புகளையே உடைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இதனை தடுக்க என்னவழி என்றால் இவ்வாறு நாம் உருவாக்கும் பிடிஎப்  கோப்புகளுக்கு என தனியாக பூட்டு உருவாக்கினால் மட்டுமே தடுக்க முடியும்.
நாம் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையற்றதாக இருந்தால் மட்டுமே கடவுச்சொற்களை எளிதில் உடைக்க முடியும். பிடிஎப் கோப்புகளை உருவாக்க இலவச மென்பொருள்கள் பல உள்ளன.
கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றுதான் Doro PDF மென்பொருள் ஆகும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் நீங்கள் கடவுச்சொல்லுடன் பிடிஎப் கோப்பாக உருவாக்க நினைக்கும் கோப்பினை திறக்கவும்.
பின் File --Print என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Printer என்னும் ஆப்ஷனில் Doro PDF Writer என்பதை தேர்வு செய்து பின் OK என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encryption என்னும் டேப்பினை தேர்வு செய்து குறிப்பிட்ட கடவுச்சொல்லை உள்ளிடவும். கடவுச்சொல்லானது எண் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருப்பின் சிறந்தது. கூடவே பெரிய எழுத்துக்கள் இருப்பது சிறந்தது.
கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது பிடிஎப் கோப்பானது கடவுச்சொல்லுடன் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த Doro PDF மூலம் அனைத்து விதமான கோப்புகளையும் கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் கோப்பாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.


பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை அள்ளிக் கொடுக்கும் இணையம்

பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை கொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் இத்தளத்தில் ஒரு புதுமை இருக்கிறதுஅது என்னவென்றால் நண்பருக்கு சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி எப்படி இருக்க வேண்டும், அலுவகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும், மனைவி அல்லது நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்துச்செய்தி எப்படி அனுப்ப வேண்டும் என்று துல்லியமாக பட்டியலிடுகிறது.
வருடா வருடம் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை தான் அனுப்புகிறோம் அதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான், பல தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை என்று சென்று விளம்பரங்களை தான் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை அள்ளி கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இலவச பிறந்தநாள் செய்திகள் இணையதளப் பெயரை ஞாபகம் வைப்பதும் எளிது தான். இத்தளத்திற்கு சென்று நாம் Birthday Card Messages, Love Birthday Messages, Holiday Birthday Messages Teenage Birthday Messages, Pets Birthday Messages, Co-Worker Birthday Messages போன்ற எந்த வகையில் நாம் பிறந்தநாள் வாழ்த்து ச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதை சொடுக்கி அடுத்து வரும் திரையில் இருந்து நமக்கு பிடித்தமான வாழ்த்துச்செய்தியை எடுத்து மின்னஞ்சல் அல்லது SMS வழியே அனுப்பலாம்.
தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் வாழ்த்துச்செய்தி SMS வழியே அனுப்பும் வசதி இருக்கிறது. 85 -க்கும் அதிகமான வகையில் கிரியேட்டிவான( Creative) வாழ்த்துச் செய்தி இத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.
இணையதள முகவரி