Home » » டிஜிட்டல் நன்னெறிகள்


இமெயில், பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்கள், மொபைல் போன்கள், வீடியோ அழைப்புகள், அரட்டை கட்டங்கள், வலை மனைகள், தகவல்களுக்கான பதில்கள், டெக்ஸ்ட் குறிப்புகள் என நம் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் டிஜிட்டல் அம்சங்கள் கொண்டதாய் நிறைந்து இயங்குகின்றன........
இந்த புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளும் பலர் இதில் எப்படி இயங்க வேண்டும் என அறியாமல் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பேஸ்புக் ஒன்றில், நம்மை ஒரு நண்பர் என்னுடன் தோழனாக இரு என்று அழைக்கிறார். இந்த அழைப்பினை ஏற்றுக் கொள்வதா? அல்லது புறக்கணிப்பதா என்று தெரிய வில்லை.
ஒரு போன் அழைப்பு பேசிக் கொண்டிருக்கையில் இணைப்பு அறுந்து போனால், யார் மீண்டும் அழைப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. நமக்கு வந்திருக்கும் மிஸ்டு கால் அனைத்தையும் நாம் அவற்றைப் பார்க்கையில் அழைக்க வேண்டுமா? என்பது ஒரு பெரிய மனப்போராட்டம். அழும் குழந்தையை கொண்டு வந்திருக்கும் ஒருவர், மற்றவர்கள் போனில் பேசுவதற்காக, குழந்தையை வெளியே அழைத்துச் செல்ல வேண்டுமா? அல்லது மற்றவர்கள் போனை அணைத்து வைக்க வேண்டுமா? யார் அரட்டைக்கு அழைத்துப் பேசினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும், நேற்று வாங்கிய சட்டை குறித்த தகவல் உட்பட, தர வேண்டுமா? வீடியோ அழைப்பில் இருக்கையில் மற்றவர்களைப் போட்டோவாக எடுக்கலாமா? மொபைல் போனில் கேமரா இருப்பதனாலேயே அடுத்தவர்களை சரமாரியாக போட்டோ எடுக்கலாமா? அவ்வாறு எடுத்ததனை அவரின் அனுமதியின்றி அடுத்தவருக்குக் கொடுக்கலாமா?
இப்படி எத்தனையோ தடுமாறும் விஷயங்களை, சூழ்நிலைகளை நம் டிஜிட்டல் வாழ்க்கை நமக்குத் தந்துள்ளது. இவை குறித்த தீர்வுகளைத் தருகிறது Link என்ற முகவரியில் உள்ள இணைய தளம். இதில் சென்றால், முகப்புப் பக்கத்தில், ஒரு சில விளக்கங்கல் உள்ளன. கீழாக, ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி பல சூழ்நிலைகளுக்கான தீர்வுகள் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.
இன்றைய சூழ்நிலையில், நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் உள்ளன. கட்டாயம் பார்த்து, தெரிந்து பழக வேண்டிய இணைய தளம்.