Home » »

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

நாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை. இதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.இதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.
இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.
இந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்


PRINT PREVIEW: கூகுள் குரோம் உலவியின் புதிய வசதி

தற்போதைய நிலவரப்படி இணையத்தில் அதிகமான வாசகர்களால் உபயோகப்படுத்தப்படும் உலவிகளில் இரண்டாம் இடத்தில் குரோம் உலவி உள்ளது.இதற்கு முன்னர் இந்த இடத்தில் இருந்த பயர்பொக்ஸ் உலவியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு அந்த இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் தொடர்ந்து IE உலவி உள்ளது.
வெளியிட்ட சில வருடங்களிலேயே இந்த இமாலய இடத்தை அடைய முக்கிய காரணம் இதன் எளிமையோடு கூடிய வேகமும் ஆகும். மற்றும் உலவியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அடிக்கடி அதன் அடுத்த பதிப்பை வெளியிட்டு வாசகர்களை கவர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.
இந்த வகையில் இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர். இனி நாம் இணையத்தில் ஏதாவது பிரிண்ட் எடுத்தால் அதன் PRINT PREVIEW பார்த்து கொள்ளலாம்.
இதனால் அனைத்து பக்கங்களையும் பிரிண்ட் எடுத்து நமக்கு தேவையானதை தேடி எடுத்து கொள்ளாமல் குறிப்பிட்ட நமக்கு தேவையான பகுதியை மட்டும் PRINT எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக நீங்கள் PRINT எடுக்க போகும் இணைய பக்கத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கீபோர்டில் CTRL+P அழுத்துங்கள். இல்லையேல் SETTINGS - PRINT சென்றும் கொடுக்கலாம்.
உங்களுக்கு இப்பொழுது ஒரு புதிய டேப்(TAB) திறக்கும். அதில் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இடது பக்கத்தில் PRINT சம்பந்தமான வசதிகளும் வலது பக்கத்தில் PRINT PREVIEW வந்திருக்கும்.
இதில் உங்களுக்கு தேவையான பக்கத்தை மட்டும் தேர்வு செய்து கொடுக்க PAGES பகுதியில் ALL என்பதற்கு பதில் அந்த குறிப்பிட்ட பக்க எண்ணை மட்டும் கொடுத்து PRINT எடுத்து கொள்ளலாம்.
CTRL+P கொடுத்த பின் உங்களுக்கு PRINT PREVIEW விண்டோ வரவில்லை எனில் நீங்கள் உங்கள் உலவியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இந்த லிங்கில் Google Chrome 13 சென்று குரோம் உலவியை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.




2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்

2012ம் ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவருக்கும் இருக்கும்.பல இடங்களில் குறிப்பாக மாயன் காலண்டர் கணிப்புபடி 2012 டிசம்பர் 12ல் உலகத்திற்கு பாதிப்பு வரலாம் என்ற செய்தியும் வெகுவேகமாக மகக்ளிடையை பரவிவருகிறது. இதைப்பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
மாயன் காலண்டர்-ஐ பொருத்தவரை இது அதில் கூறி உள்ள அனைத்தும் நடந்து இருக்கிறது, 2012-ல் உலகம் அழியும் என்பது மாயன் காலண்டரில் உள்ள தகவல் என்று பல பேர் கூறிவருகின்றனர்.
அதற்கு பின் மாயன் காலண்டரில் எந்த தகவலும் இல்லை. அறிவியல் ரீதியாகவும் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று பல பேர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையான தகவல்களை அறிவியல் ரீதியாக சொல்ல ஒரு தளம் உள்ளது.
2012ஐ மக்கள், விஞ்ஞானிகள் எப்படி எல்லாம் கணித்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிய வரும் அல்லது தெரிந்த தகவல்களை இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
பூமியின் வயது என்ன என்பதில் தொடங்கி மாயன் காலண்டர் வரை அனைத்தையும் விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறது. மாயன் காலண்டர் கூறி உள்ளது எல்லாம் சித்திரம் மற்றும் சில விநோத கூறியீடுகள். சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாக மாயன் காலண்டரில் இப்படி தான் இருக்கிறது என்று யாரும் துல்லியமாக கூறியதில்லை.
ஆனால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதை மாயன் காலண்டருடன் ஓப்பிடு செய்து ஏற்கனவே இது மாயனில் சொல்லி இருக்கிறது என்பதை தெரிவிக்கின்றனர். சில நிகழ்ச்சிகள் மாயன் காலண்டரில் உள்ளதை பார்க்கும் போது உண்மையான நிகழ்ச்சி தான் என்பதை மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரமும் உள்ளது.
இதைத்தவிர வானவியல் சம்பந்தமான பிரச்சினைகள் 2012ல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 2012ல் என்னவெல்லாம் நடக்கலாம் என்று கணிப்பவர்களுக்கு இந்தத்தளம் பதிலாக இருக்கும்.
இணையதள முகவரி




இலக்குகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்

இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் தளத்தை குறிப்பிடலாம்.இந்த தளம் இலக்குகளையும், லட்சியங்களையும் வெளிப்படுத்தி செய்து முடித்த பின் அந்த சாதனையை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும் அதனை அடைய இந்த தளம் கைகொடுக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இலக்குகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக இது விளங்குகிறது.
எப்படியும் செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் அல்லவா. ஆனால் அவற்றை செய்து முடிக்கும் வேகமும், உத்வேகமும் தான் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை.
இயல்பான சோம்பல், சூழ்நிலை அமையாதது, வாழ்க்கை சுமை, பொருளாதார தடைகள் என பல்வேறு காரணங்களினால் செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.
இப்படி தான் பாடகராகும் பெரும் கனவோடு இசை திறமையை மனதிற்குள் வைத்து கொண்டு சாப்ட்வேர் நிபுணராகவோ மார்க்கெட்டிங் பிரதிநிதியாகவோ வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது.
இதே போல தான் அழகிய மலைப்பகுதியில் எந்த கவலையும் இல்லாமல் இயற்கையை அனுபவித்து ரசிக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை கூட நிறைவேற்றி கொள்ளும் வழியில்லாமால் வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட வேண்டும், ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று எத்தனையோ விதமான ஆசை ஒவ்வொருக்கும் இருக்கலாம். இவற்றை எல்லாம் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்வதகான இடம் தான் "பக்கட்லிஸ்ட்".
வாழ்க்கையில் அடைய நினைபவற்றை, செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பவற்றை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கான உறுப்பினர் பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் தங்கள் இலக்குகளையும் லட்சியங்களையும் தெரிவிக்கலாம்.
இந்த இலக்குகள் எட்டப்பட்டு விட்டால் அவற்றை அடைந்த விதத்தை பகிர்ந்து கொள்ளலாம். உறுப்பினர் பக்கத்தில் இடது பாதி இப்படி செய்ய நினைப்பவைக்கும் வலது பாதி செய்து முடித்த வெற்றி கதைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற உறுப்பினர்கள் பக்கத்திற்கும் விஜயம் செய்து அவர்களின் இலக்குகளையும் பார்வையிடலாம். இப்படி சக உறுப்பினர்களின் இலக்குகளை தெரிந்து கொள்ளும் போது நமக்கும் ஒருவித ஊக்கம் பிறக்கும். அதே போல நாமும் கருத்து தெரிவித்து அவர்களை ஊக்குவிக்கலாம்.
நெஞ்சம் முழுவதும் ஆசைகளையும் இலக்குகளையும் வைத்திருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தலாம். எதை செய்வது எனத் தெரியாமல் விழிப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி மற்றவர்கள் மூலமாக வழிகாட்டுதல் பெறலாம்.
உறுப்பினர்களின் இலக்குகள் குறிச்சொல் படியும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இலக்குகளுக்கான சமுக வலைப்பின்னல் தளம் என்பதால் சக உறுப்பினர்களை பின்தொடரலாம். அப்படி பின் தொடரும் போது அவர்களின் புதிய இலக்குகள் அல்லது சாதனைகளை உடனடியான தெரிந்து கொள்லலாம்.
இணையதள முகவரி


ஓடியோ கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு

ஓடியோ கோப்புகள் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது mp3, mp4 போர்மட்டுகள் மட்டுமே ஆகும்.இன்னும் இதுதவிர பல்வேறு ஓடியோ போர்மட்டுகள் உள்ளன. அவை MP3, AAC, WAV, WMA, CDA, FLAC, M4A, MID, MKA, MP2, MPA, MPC, APE, OFR, OGG, RA, WV, TTA, AC3, DTS இது போன்று இன்னும் பல்வேறு போர்மட்டுகள் உள்ளன.
இவையாவும் தனித்தனி ஒலி அமைப்புகளில் செயல்படக்கூடியது ஆகும். நம்முடைய கணணியில் அனைத்து விதமான ஓடியோ கோப்புகளையும் நம்மால் கேட்க முடியும். ஆனால் ஐபேட், மொபைல்போன்களில் இதுபோன்ற வசதிகள் குறைவு, ஒரு சில குறிப்பிட்ட ஓடியோ போர்மட்களை மட்டுமே சப்போர்ட் செய்யும்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அனைத்து விதமான ஓடியோ கோப்புகளையும் கேட்க முடியாது. இந்த நிலையை தவிர்க்க நாம் வேண்டிய ஓடியோ போர்மட்டில் மாற்றம் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add என்னும் சுட்டியை அழுத்தி ஓடியோ கோப்புகளை உள்ளினைத்து கொள்ளவும்.
பின் Output என்ற இடத்தில் விருப்பமான ஓடியோ போர்மட்டினை தேர்வு செய்யவும். இந்த மென்பொருள் மூலம் மாற்றம் செய்யக்கூடிய ஓடியோ போர்மட்கள் AAC, AC3, AIFF, AMR, AU, FLAC, MP3, M4A, MP2, OGG, WAV, WMA ஆகியவை ஆகும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி மாற்றம் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலமாக ஓடியோ கோப்புகளை மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் ஓடியோ கோப்புகளை ஒன்றிணைக்கவும், குறிப்பிட்ட ஓடியோ கோப்பில் இருந்து வேண்டிய பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுக்கவும் முடியும். இந்த மென்பொருள் மூலமாக ஓடியோ கோப்புகளை எளிமையாக வெட்ட முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
தரவிறக்க சுட்டி