
Facebook பயனடுத்தாத மனித ஜந்துக்களை இப்பூமியில் காண்பது அரிது. அதிலும் Chat வசதி ஒரு அற்புதமான தொழில்நுட்பம். இது தான் நவீன வரலாற்றின் தொட்டில். இதை நான் சொல்லவில்லை. பயன்படுத்தியோர் சொல்லுகிறார்கள். இப்போது விடயத்துக்கு வருவோம்.நகைமுகம் அல்லது புன்னகை தவழும் முகம் அல்லது ஸ்மைலி (☺/☻) எனப்படுவது, மனித முகத்தின் அழகிய புன்னகையை குறிக்கப் பயன்படுகின்ற உணர்ச்சித்திரம் (emoticon) ஆகும். இது பொதுவாக, மஞ்சள் நிறமுடைய (வேறு பல நிறங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு) வட்டத்தில் (அல்லது கோளத்தில்) கண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கரிய நிற புள்ளிகளும் புன்னகை பூக்கும் வாயை குறிப்பதற்கு வளைந்த வடிவமுடைய கரிய நிற வளைகோடொன்றும் அமைந்த நிலையில் காணப்படும்.