Home » » Google Earth எளிய அறிமுகம்

இப்பதிவில் Google Earth பற்றியும் அதன் சில பயன்பாடுகள் பற்றியும் மேலோட்டமாக பார்க்க போகிறோம்.

Google Earth

கணனியில் நிறுவி பயன்படுத்த கூடிய Google தரும் இலவச வரைபட மேம்பட்ட மென்பொருள். இதற்குரிய நீட்சி உலாவிகளுக்கும் கிடைக்கிறது. அதை பற்றி இங்கு எதுவும் சொல்லவில்லை. நீங்கள் தொலைபேசியில் Google Earth app பயன்படுத்தினாலும் இப்பதிவு பொருந்தும்.

Panorama படங்கள், காலநிலை, விமான பயணம், 3 D கட்டடங்கள் என அட்டகாசமான வசதிகள் இலவசமாக கிடைக்கிறது.  இதன் வர்த்தக பதிப்பும் உண்டு.

Google Earth , Google Maps என்ன வேறு பாடு?

இருபரிமாண street views, Satellite maps , road maps , buildings இவை தான் Google Maps. ஆனால் Google Earth க்கு கீழே உள்ள படமே போதும்.



Google earth இல் கிடைத்தரையை தெளிவாக பார்க்கலாம். அதாவது முப்பரிமாணம். 3D GPU rendering மூலம் மெய்நிகர் தன்மை சாத்தியமாக்கப்படுகிறது. Flight simulation  விமானம் மூலம் பறந்தபடி கூட பார்க்கலாம். இதை பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.

வேற்று கிரகங்களுக்கும் சுற்றுலா செல்லலாம்...

இப்பதிவு பகிர்வதன் நோக்கமே இன்னும் சில நாட்களில் Thaj Mahal ளும் அதை அண்டிய பகுதிகளும் Google Earth இல் வெளியாக இருக்கின்றன. பொதுவாக 2010 க்கு பின் வந்தவர்களுக்கு Google earth பற்றி தெரிய வாய்ப்பு குறைவு.

Google Earth பயன்படுத்துவது எப்படி?

Google எப்பொழுதும் கணனியில் தானே இருக்கும். இதன் மூலம் இடங்களின் தகவல்களை URL மூலம் பரிமாற முடியாது தானே. அதனால் சிறப்பான KML வகை file மூலம் பரிமாறப்படும்.

எதிர்காலங்களில் கணணிக்கல்லூரியில் சிறப்பிடங்கள் பற்றி Google earth பதிவுகளில் இவ்வாறன Files தான் பகிரப்படும். இவை மிக மிக சிறிதாக இருக்கும் (1-3kb) files. இவற்றை Google earth நிறுவிய கணனிகளில் Double click மூலம் திறக்கலாம்.

இதன் அறிமுகமாக Underwater waterfall எனப்படும் Mauritius Island உள்ள இடத்தை பின்வரும் KML கோப்பின் மூலம் காணுங்கள். உண்மையில்  Underwater waterfall  என ஒன்று இருக்க முடியாது. இதை பற்றி ScienceBlogs.com தெளிவாக சொல்லி உள்ளது.
What you’re witnessing, that looks like an underwater waterfall, is actually sand from the shores of Mauritius being driven via ocean currents off of that high, coastal shelf, and down into the darker ocean depths off the southern tip of the island.