Home » » Blogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன - சரிசெய்வதெப்படி?

Google Reader சேவை செயல் இழக்க செய்யப்பட்டதன் பின்னர், பலரும் மாறியது Feedly சேவைக்கு தான். 2009 களில் தமிழ் பதிவுலகில் புகுந்தவர்களுக்கு, அவர்களின் வாசகர்கள் Feeds மூலமும் Friend connect மூலமும் அணுகப்பட்டனர். ஆனால் 2012 களில் பின்னர் இந்த நிலை மாறி, சமூக வலைத்தளங்களில் இணைப்பை பகிர்வது மூலம் வாசகர் வட்டம் பெருகியது.ஆனால் Feeds மூலம் இன்றும் வலைப்பூக்களை அணுகுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.


அண்மையில் தமிழில் ஜனரஞ்சகமான விமர்சனங்களை வழங்கும் ஒரு தளத்தின் Feeds புதுப்பிக்கப்படவில்லை என வாசகர் ஒருவர் கருத்துரைத்து இருந்தார். அதை ஆராய்ந்த போது தான் சில தொழிநுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டன. அதை உங்களுடன் பகிர்ந்து, இதை எப்படி சரி செய்வது எனவும் இப்பதிவில் பார்ப்போம்.

Feeds Update இல் பிரச்சனை என்றால் என்ன?

உங்கள் Feeds (feedburner) இல் நீங்கள் இடும் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டாது, எப்போதோ இட்ட பழைய பதிவு மட்டும் காணப்படும்.

இதனால் உருவாகும் விளைவுகள் என்ன?

Feeds இனை பயன்படுத்தும் சேவைகள் அனைத்தும் நின்றுவிடும் - உங்கள் புதிய பதிவுகள் வாசகருக்கு சென்றடையாது.

  • Friend connect மூலம் இணைந்தவர்களுக்கும் புதிய பதிவுகள் பற்றிய செய்தி செல்லாது.
  • Feeds to Email சேவை நின்றுவிடும்.
  • Feedly போன்றவை உங்கள் தளத்தை புதுப்பிக்கிறது.
  • Android, iOS இல் இயங்கும் feeds apps  உங்களை கைவிட்டு விடும்.
மொத்தத்தில் உங்கள் வாசகரில் 10% பேரை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

இந்த பிரச்சனை யாருக்கு ஏற்படும்?

தமிழில் பந்தி பந்தியாக  பக்கம் பக்கமாக பதிவு எழுதுபவர்களுக்கு. நீங்கள் ஒரு பதிவை பெரிதாக எழுதி ஏனையதை சிறிதாக எழுதினாலும், பெரியதுக்கு பிறகுவருபவை எவையும் update ஆகாது.

காரணம் என்ன?

இதை பெரிதாக ஆராய்வது இங்கு பொருத்தம் அல்ல. சுருங்க சொன்னால், feeds க்கு சில மட்டுப்பாடுகள் உண்டு. இவ்வளவு KB இல் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. அதை மீறும் போது உங்கள் feeds புறக்கணிக்கப்படும். குறிப்பாக feedburner சேவை உங்கள் Feed முகவரியை நிராகரித்து விடும்.

தீர்வு

சிக்கலாக பிரச்சனைக்கு மிக எளிதாக தீர்வு. இதன் மூலம் உங்கள் Feeds அளவு மட்டுப்படுத்தப்படுகிறது. அவ்வளவே. இனி உங்கள் வாசகருக்கு உங்கள் பதிவின் சுருக்கம் சென்றடையும். முழுவதும் வாசிக்க உங்கள் இணைய பக்கத்துக்கு வந்தே ஆக வேண்டும்.

இதை செய்ய 
Blogger > Settings > Other >  Allow Blog feed > (set to)  Short (from full)
க்கு செல்லுங்கள்.  உதாரணம் கீழே..>