Home » » Google அறிமுகப்படுத்தும் இலவச இணையம் Free Zone - Internet with no data charges

உள்ளடக்கத்துக்கு முதல்,
  • இது இலங்கையில் வசிக்கும் Dialog (Axiata PLC) ISP பாவனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
  • Google இன் சேவைகளை மட்டுமே அணுகலாம்.
  • கையடக்க தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்தலாம்.
இதுக்கு மேலும்  தொடர்ந்து வாசிக்க வேண்டுமா  என்று முடிவெடுத்து தொடருங்கள். 
இலங்கையில் முன்னணி ISP ஆகிய Dialog மட்டுமே இதை வழங்குகிறது. இவர்கள் முன்பு Facebook க்கு என இவ்வாறனதொரு சேவையை அறிமுகப்படுத்தினர். இப்போது கூகிள் தனது தெரிவுசெய்யப்பட சேவைகளை இலவசமாக Data charge இல்லாமல் அணுக  Philippines, South Africa, Indonesia,  Sri Lanka ஆகிய நாடுகளில் அறிமுக படுத்திய சேவை தான் Free Zone

எவ்வாறு அணுகுவது?

  1. முதலில் g.co/freezone க்கு உங்கள் தொலை பேசி மூலம் செல்லுங்கள்.
  2. உங்கள் Google கணக்கு மூலம் உள் நுழையுங்கள்.
  3. இதன் பின்னர் அங்கிருந்து உங்கள் சேவைகளை அணுக முடியும் - இலவசமாக 

சில குறிப்புக்கள்:

  • நீங்கள் தேடும் போது தேடல் முடிவில் வரும் 1'ம் இணைப்பை அணுகுவது இலவசம். அணுகிய முடிவில் உள்ள இணைப்புக்கு கட்டணம்.  உதாரணமாக கணணிக்கல்லூரி என்று தேடி வரும் தேடல் முடிவில் உள்ள www.tamilcc.com க்கு வருவது வரை இலவசம். அதன் பின்னர் இங்குள்ள outlink - (www.tamilcc.com/p/help.html) களை கிளிக் செய்வது பணம்.
  • கட்டணம் அறவிடும் நடைமுறைக்கு செல்லும் போது அறிவிப்பு திரை வந்த பின்னரே அறவிடப்படும் - கொஞ்சம் தப்பிக்கலாம்.
  • Gmail, G+, Search ஆகியன இலவசம்.

இதன் தீமைகள் :

  • 2nd Step verification உள்ள Google கணக்குகள் மூலம் உள் நுழைய முடிவதில்லை.
  • Gmail, G search, G+  மட்டுமே இலவசம்.
  • கணனியில் பயன் படுத்த முடியாது. Opera Emulator மூலம் செல்ல வழி இதுவரை கண்டு பிடிக்கவில்லை. கிடைத்தால் நல்லம்.
  • நேரடியாக அணுக முடியாது- g.co/freezone இன் மூலமே உள் நுழைய வேண்டும்.
இது பற்றிய Google இன் அறிவிப்புப்பக்கம் இங்கே - google.com/intl/en_lk/
இது பற்றிய உதவிப்பக்கம் இங்கே : support.google.com

இதனால் கிடைக்க போகும் ஒரே நன்மை G+ இனை பாவித்தால் ஓரளவுக்கு கட்டுபடியாகும். அது மட்டும் தான்.