Home » » தேடுபொறி உகப்பாக்கம் - Meta Tag (SEO:2)

அண்மைக்காலங்களில் Meta Tag என்பது சில வலைபூக்களில் அதிகளவு கதைக்கப்பட்டது. அதற்கு பெரும்பாலான காரணம்  பிளாக்கரில் perment link அறிமுகப்படுத்தப்பட்டமையே ஆகும். எவ்வாறாயினும் இன்றைய கால கட்டத்தில் இந்த Meta Tag என்பது பயனற்ற ஒன்று. பொது அறிவிற்காக இதை பதிகிறேன். இறுதியில்  இது ஏன் பயனற்றது என்பதை பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்னர் இவ் விடயமே SEOவின் உயிர் நாடி. இன்று பயனற்ற ஒன்று. ஆரம்பத்தில் தேடுயந்திரங்கள் இவற்றை  ஆராய்ந்தே தேடுபவரின் keyword உடன்  எந்த  meta tag கொண்ட இணைய பக்கம்  அதிக அளவில் ஒத்து போகிறதோ அவையே முன்னையில் Seach Engineஇல் தோன்றுச்செய்யும்.



முதலில் சில Meta Tag உதாரணங்களை பார்ப்போம்:

  • Apple நிறுவன இணைய பக்கத்தில்: 
<meta name="Author" content="Apple Inc." />
<meta http-equiv="X-UA-Compatible" content="IE=EmulateIE7, IE=9" />
<meta name="omni_page" content="Apple - Index/Tab" />
<meta name="Keywords" content="Apple" />
<meta name="Description" content="Apple designs and creates iPod and iTunes, Mac laptop and desktop computers, the OS X operating system, and the revolutionary iPhone and iPad." />

  • Adobe நிறுவன முகப்பு:
<meta name="robots" content="NOODP" />
<meta name="description" content="Adobe is changing the world through digital experiences.  We help our customers create, deliver, and optimize content and applications." />

  • Yahoo:
<meta name="description" content="Welcome to Yahoo!, the world's most visited home page. Quickly find what you're searching for, get in touch with friends and stay in-the-know with the latest news and information.">
    <meta name="keywords" content="yahoo, yahoo home page, yahoo homepage, yahoo search, yahoo mail, yahoo messenger, yahoo games, news, finance, sport, entertainment">

  • Google, WikiLeaks, Nasa, Facebook ,Twitter, Pinterst: (எவையும் இல்லை)

இவற்றை பார்க்கும் போதே விளங்கி இருக்கும். இவற்றை விட இன்னும் பல meta tagகள் உள்ளன. எனினும் இவற்றுக்கும்  SEOக்கும் சம்பந்தம் இல்லை.

Meta Tag எங்கு பயன்படும்:

இவை பெரும்பாலும் <head>  ஒட்டு திறக்கப்பட்டவுடனே பதியப்படும். இவற்றின் மூலம் பக்க அளவு, பக்கத்தை திருப்பி விடுதல்,  பல கட்டுப்பாடு அமைப்புக்கள் என்பவற்றை ஆளலாம். இதை விட ஒவ்வொருவரும் தமது செயலிகளை அடையாள படுத்த கூட இதை பயன்படுத்தலாம். (Eg: Google Web master Verification)

கூகிள் Meta Tags க்கு தரும் விளக்கம்:


Google: Actually, Meta Tags Do Matter

கூகிள் சொல்லும் சில குறிப்புக்கள்:

  1. நிச்சயம் ஒவ்வொரு பக்கமும் meta descriptionனை கொண்டு இருக்க வேண்டும்.
  2. ஒவ்வொரு பக்கமும் மிக மிக பொருத்தமான வேறுபட்ட  meta descriptionனை கொண்டு இருக்க வேண்டும்.
  3. குறித்த தளம் தன்னை பற்றிய அனைத்து தகவல்களையும் meta tag மூலம் தெரியபடுத்த வேண்டும்.
இதை விட மேலதிக தகவல்களை கூகிள் உதவி பக்கத்தில் காணுங்கள் 

Meta Tags எப்படி உருவாக்கி அமைப்பது:


பிளாக்கர்களில்:
Setting > Basic > Description பகுதியே இதற்கு உரியது. மேலும் தேவையாயின் இங்கே சென்று உருவாக்கிய பின்னர் உங்க templateடை திறந்து head பகுதியின் உள் இணையுங்கள். (பயனற்றது)


ஏனைய வலைதளங்களில் :
இன்று இது அவ்வளவு முக்கியமில்லை. எனினும் தேவையானவர்களுக்காக, இணையத்தில் அதிகளவான Meta Tag online Generators இலவசமாக கிடைக்கின்றன. இங்கே சென்று தேவையானதை பெறுங்கள்.  Meta Tag உருவாக்கிய பின்னர், உங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் head  ஒட்டின் கீழே இணையுங்கள். ஆனால் மிக முக்கியம், ஒவ்வொரு பக்கமும் வேறுபட்ட Title Tag களை கொண்டு இருக்க வேண்டும்.   



Pinned Image**Meta Tagஇல் Robots.txt முக்கியமானது. அதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

இவற்றை விட இன்னும் ஆழமாக செல்ல முடியும். எனினும் இது எவ்வகையிலும் பயனற்றது. எனவே தான் இத்துடன் நிறைவு செய்கிறேன். 





Meta Tag  ஏன் பயனற்றது?

Pinned Image
HTML5 பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். இதிலும் Meta Tag ஆதரிக்கப்படுகிறது. இப்போது தேடல் பொறிகளில் முன்னணியில் உள்ள கூகிள் போன்ற நிறுவங்கள் Meta Tag முறைகளை வெறுத்து விட்டன. உதாரணமாக கூகிள் தேடலின் துல்லிய தன்மைக்காக Google Penguin, Panda algorithm மூலம் தேடலை வகைப்படுத்துகிறது. கூகிள் ஏன் இதை ஆதரிப்பது இல்லை என்பதற்கும் அவர்களுடைய உத்தியோக பூர்வ youtube சேனலில் அதிக விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதன் சாராம்சம் , போலியான பல meta tag களை இலகுவாக உருவாக்க முடிகின்றமையும் பெரும்பாலான தளங்கள் ஒரே சாயலில் இதை பயன்படுத்துவதாலும், நிகழ் நேர தேடுதலுக்கு இவை பயனளிக்காமையும் ஆகும். இப்போது keyword முறைக்கே அதிகளவு முக்கியத்துவம் Panda Algorithm மூலம் வழங்கப்படுகிறது.


சுருங்க சொல்லின் தற்காலத்தில் meta tag முறைமை எவ்விதத்திலும் SEOவை பாதிப்பதில்லை.

முன்னைய பதிவில் அதிக விவரணங்கள் இடம் பெற்றமையை பலர் வெறுத்ததால் இம்முறை ஒன்றும் இல்லை.