Home » » SIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்படி? How Recover SIM cards' data?


 கொஞ்ச காலத்துக்கு முன்னாடி Google Analytic தொடர்பா தொடர் பதிவு எழுதிட்டு இருந்தன். அந்த காலத்தில வெளியிட்ட Scripts இப்ப வேலை செய்வதில்லை என complaint வந்திச்சு. இப்ப அதெல்லாம் ஒருமாதிரி update பண்ணியாச்சு. இனி நீங்க உங்க GA ரிப்போர்ட்'ல போய் Event பகுதில பாருங்க. நிச்சயம் வித்தியாசம் இருக்கும். ஏதாச்சும் உதவி தேவை'னா [email protected] க்கு ஒரு மெயில் அனுப்புங்க. அதோட நான் அனுப்பிற பதில் பலருக்கு கிடைக்கிறதில்லை என்று நினைக்கிறேன். Gmail'ல பொருத்தவரை @ovi.com என்கிறது ஸ்பாம் தான். எனவே நான் அனுப்பிற ஈமெயில் ஸ்பாம் பாக்ஸ்'ல வருதா'னு ஒரு தடவ check பண்ணி பாருங்க.

பலருக்கு தெரியாத விடயம், உலகில் மிக சிறிய கணணி, உங்கள் sim card தான் என்று. அதில் ஒரு CPU, ROM என அனைத்தும் இருக்கிறது. எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடு தான். இதில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் தானாக அழிவதில்லை.
நீங்கள் அழித்தால் தான் வாய்ப்பு உண்டு. என்றாலும் இதை மீள எடுக்கலாம். இதை பற்றி இப்பதிவு மேலோட்டமாக சொல்கிறது.

Recovery


பொதுவாக Flash Drive போல தான். அழித்ததை மீள பெறலாம். ஆனால் அழித்தவுடன் செய்ய வேண்டும். அதற்கு மேல் வேறு ஏதாவது எழுதினால் / பதிவு செய்தால் பயனளிக்காது.

என்ன தேவை?

  1. Recover Software
  2. SIM card Reader

Software

இணையத்தில் ஏராளமான SIM recovery Softwares கிடைக்கின்றன. இதில் பெரும்பாலும் கட்டண செலுத்த வேண்டும். ஆனால் நமக்கு அந்த பழக்கம் இல்லையே. Torrent இலும் தேடி பார்த்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. பெரும்பாலும் SIM Reader உடன் கிடைக்கிறது. முன்னணி 4 மென்பொருட்கள் பற்றி இங்கே விமர்சித்து இருக்கிறார்கள். 

Reader

Sim reader அவசியம் தானே. இதை Torrent இல் எல்லாம் பெற முடியாது. பெரும்பாலும் 3$ க்கு வீட்டுக்கு வரும்படி இலவசமாக Ebay இல் வாங்க முடியும். இங்கே Ebay இல் சிறப்பான Readers இருக்கிறது. அரிதாக சில Mobile phones களில் SIM இருக்கும் போதே கணனியில் இணைத்து recover செய்யும் வசதி கிடைக்கும். உங்கள் Mobile இனை பொறுத்தது.

Recover செய்வது எப்படி?

SIM Reader இல் SIM இனை நுழைத்து கணனியில் செருகி, மென்பொருளை இயக்கி அழித்ததை மட்டும் இன்றி இன்னும் பல விடயங்களை செய்யலாம்.

SIM Card Information 

  • ICCID
  • Pin1 State
  • Pin2 State
  • Unblock Pin1 State
  • Unblock Pin2 State
  • Maximum Phone number 
  • Maximum SMS messages
  • LDN (Last dial number)
  • FDN (Fixed Dial number)
ஏற்கனவே உங்களிடம் Reader இருந்தால் DATA DOCTOR RECOVERY - SIM CARD மூலம் முயற்சி செய்து பாருங்க. இங்கு அந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. [Serial No:  DD80PLCP24D5T67VIK5-4VYI ] [Home page: http://www.datadoctor.biz]


இப்பெல்லாம், Google Analytic மூலம் ஒருத்தர் எங்க இருந்து உங்க சைட்'க்கு (Geo location) வந்திருக்கிறார், எதை எல்லாம் கிளிக் செய்தார், Adsense விளம்பரங்களில் எத்தனை தடவை கிளிக் செய்தார், IPv6 , IPv4 எதை பாவிக்கிறார்,  எதை copy செய்தார், எங்கு Copy செய்தார், வாசிக்கும் போது நடந்துட்டு இருக்கிறாரா, ஓடி போறாரா, எவ்வளோ ஸ்பீட்'ல போறார்  என பல நுணுக்கமான விடயங்களை கண்காணிக்க முடியும். இதை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று ஆசை, ஆனால் வாசிக்க தான் யாரும் இல்லை. உங்கள் ஆதரவு இருந்தால் தமிழ் தொடராக எழுதலாம்.