Home » , » NSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும் Microsoft

அண்மைக்காலங்களில் இணையத்தில் இணைந்து இருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி இணைய தரவுகளை ஊடுருவியமை. இது தொடர்பாக தமிழில் பல கட்டுரைகள் வெளியாகி விட்டன. ஏனவே இதை பற்றி இங்கு அலச தேவை இல்லை. NSA க்கு Microsoft, Skype, Skydrive உட்பட பல சேவைகளில் ஊடுருவ அனுமதி வழங்கியமை தொடர்பான தகவல்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகியது. 


இதனால் கலவரம் அடைந்த Microsoft க்கு மற்றும் ஒரு பேரிடியாக, Microsoft , NSA க்கு Windows OS பதிப்புகள் பற்றிய இரகசிய வரைமுறைகளை வழங்கியது. இதன் மூலம் உங்கள் Windows நிறுவப்பட்ட எந்த கணணியிலும் அமெரிக்கக பாதுகாப்பு நிறுவனம் இலகுவாக அணுகி உங்கள் தகவல்களை அலச முடியும். இதை இணைய பிரபலமான Antivirus தயாரிப்பு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியது.

Open Source பயன்படுத்தும் எவரும் இதை பற்றி கண்டு கொள்ள தேவை இல்லை. ஆனால் online Cloud Data storage இல் கணக்கு வைத்த எவரின் சேவைகளையும் NSA அணுக முடியும். உதாரணமாக Google Gmail, Drive, Skydrive போன்ற எதில் உள்ள ஆவணங்களையும் NSA பார்க்க முடியும்.

இதனால் உருவாகிய எதிர்ப்புக்களை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக சமாளிக்கிறது. இதன் ஒரு கட்டமாக Microsoft மிக ரகசியமாக Windows 7 இல் ஊடுருவ NSA வழங்கிய முறைகளை மாற்றும் updates களை சில தினங்களுக்கு முன் வழங்கியது. 

இவற்றை கண்காணிக்கவும், கண்டறியவும் தான் உலகின் சிறந்த கணணி தொழில்நுட்ப ககுழு - Anonymous கண்டறிந்து இது தொடர்பான செய்திகளை இணையத்தில் பரவ விட்டார்கள்.

இவர்கள் வெளியிட்ட சில இரகசிய குறிப்புக்களின் அடிப்படையில் Tamil Tigers என்ற சொல் உள்ள ஆவணங்களை NSA கண்காணித்தமை  புலனாகிறது.

இவர்கள் கண்காணித்த சில சொற்கள்:
Bomb squad | Bomb threat | Crash | Looting | Riot | Emergency | Landing | Pipe bomb | Incident | Facility | Hazmat | Nuclear | Chemical weapon | Biological weapon | Ammonium nitrate | Improvised explosive device | IED | Abu Sayyaf | Hamas | FARC | IRA | ETA


Anonymous என்றாலே உலகில் உள்ள தலைமைப்பீடங்கள் அதிரும். அந்தளவுக்கு வலுவான கூட்டம். இவர்களால் இணையத்தில் நடந்தவை ஏராளம். உதாரணமாக சிறுவர்கள் தொடர்பான பாலியல் தளங்களை ஊடுருவி செயலிழக்க செய்தமை மூலம் இன்று இணையத்தில் இருந்து இந்த கானொளிகள், படங்கள் 99% அகற்ற காரணமாக இருந்தனர்.

** இத்தகவல்கள் அனைத்தும் கீச்சுலகத்தில் இருந்து திரட்டப்பட்டது.