இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவை தொடர்பான பதிவு இங்கே
- மிக அதிகமாகத் தேடப்பட்ட சொல், கறுப்பினத்தவரின் விடுதலைக்குப் போராடியவரும், மோனள் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா அவர்களின் பெயராகும். அண்மையில் இவர் மறைந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
- இரண்டாவதாக இடம் பெறுபவரின் பெயர் Paul Walker. Fast & Furious என்ற திரைப்படத்தின் கதாநாயகன். இவர் அண்மையில் கார் விபத்தில் இறந்து போனார்.
- மூன்றாவதாக, Apple நிறுவனத்தின் Smart phone, iPhone 5s இடம் பெற்றுள்ளது. மக்கள் இந்த போன் பற்றித் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவலாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது.
- இந்தப் பட்டியலில் நான்காவதாக இடம் பெற்றுள்ளவர் ஒரு நடிகர். இவரின் பெயர் கோரி மோந்தேக் Cory Monteith
- அடுத்த இடம் பெற்றுள்ளது சற்று வேடிக்கையான ஒரு சொல் ஆகும். Harlem Shake என்னும் சொல் மிகப் பிரபலமாகக் காணப்பட்டுள்ளது. இது ஒரு வகை நடனத்தின் பெயர். அத்துடன் இந்த நடனம் தொடர்பாக 17 லட்சம் videos தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. ஒரு மாதிரியாக கை கால்களை உதறிக் கொண்டு ஆடும் நடனம் இது. பார்க்க ஆசைப்படுவோர், youtube தளம் சென்று தேடிப்பெற்றுப் பார்க்கலாம். தனியே அறையில் ஆடியும் பார்க்கலாம்.
- பாஸ்டன் என்னும் இடத்தில், 117 ஆவது மாரத்தான் ஓட்டப் பந்தயம் குறித்த Boston Marathon என்னும் சொல் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு இந்த பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது.
- சில மாதங்களுக்கு முன், வர இருக்கும் பிரிட்டன் மன்னர் வாரிசு குறித்த செய்திகள் இணையம் எங்கும் இடம் பெற்றன. Royal Baby என்ற சொல் அந்த வகையில், இப்பட்டியலில் ஏழாம் இடத்தைப் பெற்றது. பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவர் மனைவி கேத்மிடில்டனுக்கும் பிறந்த, வருங்கால அரச வாரிசினை இந்த சொற்கள் குறிக்கின்றன. சென்ற ஜூலை 22 ஆம் தேதி, கேத் மிடில்டன் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
- எட்டாவது இடத்தில், Samsung நிறுவனத்தின் அண்மைக் கால வெளியீடான, Samsung Galaxy S4 இடம் பெற்றுள்ளது. புதிய அதிக செயல் திறன் கொண்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இது.
- மக்கள் மத்தியில், மிகப் பிரபலமான வீட்டினில் வைத்துப் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சாதனமான Play Station 4 ஒன்பதாவது இடத்தைத் தேடல் பட்டியலில் பிடித்துள்ளது.
- பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள சொற்றொடர் North Korea ஆகும். தென் கொரியாவுடன் பல நிலைகளில் முரணான உறவினைக் கொண்ட இந்த நாடு, சில நல்ல தன்மைக்காகவும், மாறான தன்மைக்காகவும் அதிகம் தேடப்பட்டது.