Home » » விடைபெறும் WinAmp

கடந்த 15 ஆண்டுகளாக, Computer  பயன்படுத்துபவர்களின் சிறந்த இசைத் தோழனாக இயங்கி வந்த WinAmp (Windows Advanced Multimedia Products) அப்ளிகேஷன் Program 'னைத் தாங்கியுள்ள இணைய தளம் Winamp.com, December20 முதல் மூடப்படுகிறது. இனி இந்த program 'னை அதன் இணையதளத்திலிருந்து பெற இயலாது. இதன் இறுதி பதிப்பு WinAmp 5.66 தற்போது அதன் இணைய தளத்தில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் அதன் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்ற November 21 அன்று இந்த புதிய பதிப்பினை வெளியிடுகையில், இணைய தளம் மற்றும் Application program மூடப்படும் தகவலும் தரப்பட்டுள்ளது.



பல்கலைக் கழகத்தில் (University of Utah) பயின்று வந்தJustin Frankel மற்றும் Dmitry Boldyrev என்ற இரு மாணவர்களால் உருவாக்கப்பட்டு, WinAmp முதல் பதிப்பு 1997ல் இலவசமாகத் தரப்பட்டது. ஒரு கால கட்டத்தில், இதனைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டி இருந்தது. Frankel தன் நிறுவனத்தினை Nullsoft எனப் பெயரிட்டு அழைத்தார். தொடர்ந்து பல மாற்றங்களை WinAmp புரோகிராமில் இணைத்தார். MP3 பைல்கள் பரவலாக அனைவரிட மும் புழக்கத்திலும், பகிர்தலிலும் இருந்த போது, இந்த புரோகிராமைப் பயன்படுத்தியவர் எண்ணிக்கை மள மளவென உயர்ந்திருந்தது. MP3, MIDI, MOD, MPEG1 audio layers 1 and 2, AAC, M4A, FLAC, WAV and WMA எனப் பல்வேறு format 'களில் அமைந்த இசைப் பைல்களை வெகு இலாவகமாக WinAmp இயக்கியது.  Windows இயக்கத்தில் இயங்கிய, பலரின் அபிமானம் பெற்ற, Music player 'ராக இது இருந்தது.

தொடக்கத்தில் Windows இயக்கத்திற்கு மட்டும் என WinAmp வடிவமைக்கப்பட்டாலும், பின் நாளில், Android,  Mac OS ஆகிய சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது.
1999 ஆம் ஆண்டில், 8 கோடி dollors கொடுத்து, AOL நிறுவனம் நல்சாப்ட் நிறுவனத்தை வாங்கி, தன் துணைப் பிரிவாக வைத்துக் கொண்டு இயக்கியது. தொடர்ந்து, இந்த program 'ல் பல மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. சென்ற நவம்பர் 20ல், மூடுவதற்கான அறிவிப்பு வெளியானவுடன், Microsoft இதனை வாங்கப் போவதாக, வதந்தி பரவியது. இணையத்தில் WinAmp வாடிக்கையாளர்களும், ரசிகர்களும், இதனை மூடக் கூடாது என விண்ணப்பத்தினை அளித்தனர். அல்லது, இந்த program source code 'னை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

WinAmp நிறுவனத்தை மூட வேண்டும் என்ற முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. iTunes, Windows media player ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, சில ஆண்டுகளாகவே, WinAmp எந்த வித புதிய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தது. Digital உலகில், பயன்படுத்தாத எதுவும் மறைந்து போகும் என்ற கூற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

iTunes உருவாக்கத்தில், முதலில் WinAmp தாக்கம் இருந்தது. WinAmp உருவாக்கிய இருவரும், இந்த வகையில் பாதையை எடுத்துக் கொடுத்தனர் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இசை உலகில் இவர்கள் இருவருக்கும் அழியாத புகழும் இடமும் உண்டு.

WinAmp உருவான வரலாறு

  • WinAmp 0.92, May மாதம் 1997ல் இலவச program  ஆக வெளியானது. February , 1998ல், பொதுவான நோக்கமுடன் கூடிய audio player 'ராக மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு plugin புரோகிராமின் கட்டமைப்புடன் வெளியானது. இதற்கான ஆதரவைப் பார்த்தவுடன், இந்த program 'ல் பல மாற்றங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.
  • June 7, 1977ல், "Winamp” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (சிறிய எழுத்து a உடன்) பதிப்பு 1.006 வெளியானது. 
  • September 1998ல், WinAmp 2.0 வெளியானது.
  • November 1998ல், 66 plugin புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. 
  • 2002 ஆம் ஆண்டு August  மாதம், Winamp3 வெளியானது. எம்.பி.3 என்பதனைத் தன் பெயரில் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு பெயரிடப்பட்டது.
  • பின்னர் WinAmp 2 மற்றும் WinAmp 3, ("Winamp 2+3=5”) இணைக்கப்பட்டு WinAmp 5 வெளியானது. 
  • Octobe10, 2007ல், தன் பத்தாவது ஆண்டுவிழாவினை ஒட்டி, WinAmp 5.5 வெளியிடப்பட்டது. இதில் பல முன்னேற்றங்கள் இருந்தன. பல மொழிகளை சப்போர்ட் செய்தது. Media Library போன்ற சிறப்பான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை உருவாக்கியதில், முக்கிய பங்கு வகித்தவர்கள் Ben Allison (Benski) மற்றும் Maksim Tyrtyshny ஆவார்கள். r
  • WinAmp 5.6 பதிப்பில், Android Wi-Fi support, Mouse Wheel support தரப்பட்டன. 
  • WinAmp 5.66, சென்ற நவம்பர் 22ல் வெளியிடப்பட்டு, நிறுவனம் மூடப்படும் அறிவிப்பும் வெளியானது.
நன்றி - தினமலர்