இம் மசூதியில் உலக சாதனைகள்:
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பள வடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம், ஈரானியக் கம்பள நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்தி செய்வதில் 1,200 நெசவாளர்களும், 20 நுட்பியலாளரும், 30 பிற தொழிலாளரும் ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச் செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பன பயன்பட்டன. இக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் இம் மசூதியிலேயே உள்ளது. செருமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளன. இவை அனைத்தும் செப்பினால் செய்யப்பட்டு பொன் பூச்சுப் பூசப்பட்டவை. இவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும் கொண்டது.
இத்தனை சிறப்புக்கள் பொருந்திய இந்த மசூதியை Google Street view மூலம் சுற்றி கீழே பாருங்கள்.