இப்போது பிரபல தளங்களை example.blogspot.com இல் நடத்திகொண்டு புதிதாக Domain வாங்க இருப்பவர்களுக்கே இப்பதிவு.
Domain வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
- .com இல் வாங்குவதே சிறப்பானது. தேவை என்றால் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் .org , .net இல் வாங்கலாம்
- .in .lk என வாங்குவது சட்ட ரீதியிலும் SEO விலும் ஆபத்தானது.
- பொதுவா Private Registration தேவை இல்லை
- பொதுவாக அனுபவம் உள்ள ஒருவரால் ஒரு Domain 1$ - 3$ க்குள் வாங்க முடியும். (ஆச்சரியம், ஆனால் உண்மை)
- வருடாந்தம் Renew செய்வது பொதுவாக 10$ - 15 $ வரை தான் செலவாகும்.
- USA இல் உள்ள DNS கொண்டவர்களிடையே வாங்குவது தான் சிறப்பானது, பாதுகாப்பானது.
- Domain Name வாங்க Godaddy தான் சிறந்தது. (அனுபவம்)
- பல வலைப்பூக்கள் என்றால் Sub Domain பயன்படுத்துவது பல வகையில் நன்மை தரும்.
- Sub Domain எப்போதும் இலவசமாக பெற கூடியது.
- எப்போதும் 1 வருடத்துக்கே முதலில் Domain வாங்குங்கள்.
- Paypal மூலம் வாங்குவதே சிறந்தது. Credit card மூலம் வாங்குவது சில சிக்கல்களை கொண்டது.
சொந்தமாக Domain இருப்பதால் நன்மைகள்:
மற்றவர்களுக்கு பந்தா காட்ட தான் பலர் வாங்கி இருக்கிறார்கள்.
- Adsense பெறுவதில் கூடுதல் முன்னுரிமை.
- உங்களுக்கென்று தனித்துவமான அடையாளம்
- Search Engines இல் ஓரளவு முன்னுரிமை
சொந்தமாக Domain இருப்பதால் தீமைகள்:
- வருடாந்த / குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை பண செலவு.
- Domain வாங்கிய பிறகு அதை பராமரிக்க தேவை இல்லை. என்றாலும் பாதுகாக்க வேண்டும்
உங்களுக்கு Domain Name தேவை தானா?
இதை வைத்து முடிவெடுங்கள்.
நீங்கள் வலைப்பூ 'தமிழில்' சொந்தமாக எழுதுகிறீரா? ஒரு வாரத்தில் குறைந்தது 2 பதிவு இட்டு வலைப்பூ தினமும் 1000 க்கும் அதிகமான பக்க பார்வைகளை கொடுக்கிறதா? உங்களுக்கு என ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா? Google Search மூலம் தினமும் குறைந்தது 20 பேராவது வருகிறார்களா? முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா? அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா? இல்லாவிட்டால் நம்பிக்கையான தொழிநுட்பம் தெரிந்த நண்பர்கள் இருக்கின்றனரா?
மேலே உள்ள ஏதாவது ஒன்றுக்கு இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு Domain தேவை இல்லை. (தொழிநுட்ப அறிவு தவிர்ந்த)
நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறீரா? உண்மையிலே பயனுள்ளதை எழுதி அதை ஆக குறைந்தது 200 பேராவது வாசிக்க உங்கள் வலைப்பூவுக்கு வருகிறார்களா? Google Search மூலம் தினமும் குறைந்தது ஒருவராவது வருகிறார்களா? முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா? அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா?
இதில் ஒன்று இல்லாவிட்டலும் உங்களுக்கு Domain தேவை இல்லை.
ஆங்கிலத்தில் சும்மா எழுதி Adsense வாங்கலாம் என்பதெல்லாம் போலியான கதைகள். இப்போது Adsense க்கு என பல அளவு கோல்கள் உண்டு.
Domain பெயர் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை
- எப்போதும் 5 எழுத்துக்குள் தெரிவு செய்யுங்கள். அப்பொழுது தான் இலகுவாக ஞாபகப்படுத்த முடியும் மற்றவர்களால். (neshamaniponnaiyaa.com)
- Domain Name க்கும் SEO க்கும் பெரிதாக இப்போது சம்பந்தம் இல்லை. குறிப்பாக Adsense இல்.
- எளிமையான உச்சரிப்பை பயன்படுத்துங்கள். Sha sa, Ya, Ja என தமிழை கொல்வது மற்றொருவர் உச்சரிக்கும் போது தவறாகி விடும். (uyiroovijham.com > uyiroviyam.com)
- உங்கள் பெயரில் வாங்குவது பொருத்தமில்லை. (soorya.com)
Domain வாங்கிய பிறகு:
சொந்த Domain க்கு மாறுவதால் உங்களுக்கு வரும் வாசகர்களோ, பார்வைகளோ பாதிக்கப்பட போவதில்லை.
Google தரும் புதிய முறையில் DNS setting செய்து கொள்ளுங்கள். (4 A Records, 1 CNAME record). முன்பு வழங்கிய CNAME மூலம் இயங்கும் தளங்கள் அடிக்கடி காணாமல் போவது இப்போது அடிக்கடி நிகழ்கிறது.
மேலதிக உதவிகளுக்கு இங்கே வாருங்கள்.