இன்று அனைவராலும் பேசப்படும் வார்த்தை "Say Goodbye to User Name and Password Logins, மற்றும் say Hello to ‘OneID’ நாமும் இதை பற்றி பார்ப்போம். password மற்றும் பாவனையாளார் பெயர் இல்லாமல் தளங்களில் உங்களை அடையாளப்படுத்தும் தொழிநுட்பம் Microsoft BizSpark. மூலம் சாத்தியமாக்கப்படுகிறது.
பெயர்: OneID Inc.
அடிப்படை திட்டம்: OneID மூலம் single-click ஊடக உங்களால் லோக் இன் செய்ய முடியும்.பாவனையாளர்கள் user name, password, credit card number அல்லது billing information போன்றவற்றை ஒவ்வொரு தளங்களிலும் பதிய வேண்டிய தேவை இல்லை. OneID இல் மையப்படுத்தப்பட்டதரவு சேமிப்பு எவையும் இல்லை ,ஆகவே பூரணமாக இரகசிய தகவல்களை hackers பெறுவது சாத்தியம் இல்லை
சாதாரண ஒரு இணைய பாவனையாளர் தனது பத்து வருட காலத்தில் ஏறத்தாழ 400 கடவுச்சொற்களை பயன்படுத்துவதாக கணிப்பிடப்பட்டுள்ளன. இவற்றிற்கு விடை அளிக்கவே இந்த One ID.
ஆரம்ப காலங்களில் கடவுச்சொற்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறு இல்லை. கடவுச்சொற்களை ஊகிக்க கூடியதாகவும்,அல்லது களவாடக்கூடியதாகவும் அல்லது பாவனையாளரை பின் தொடர்ந்து அவர்களின் தகவல்களை பெற கூடியதாகவும் உள்ளது. இவற்றின் உதாரணமாக key logger மென்பொருள்களை குறிப்பிடலாம்.
தற்போதைய இரகசிய பாதுகாப்பு முறையின் பிரதான குறைபாடு, அவர்கள் பாவிக்கும் கடவுசொற்கள் அவர்களின் கணனியில் சேமிக்கப்படுவதாகும் , அத்துடன் பல இணைய தளங்கள் அவர்களின் இரகசிய விடையங்களை சேவை நோக்கத்துடன் வினவுகின்றன, உதாரணமாக கடனட்டை இலக்கம்.
OneID ஆனது மேம்படுத்தப்பட்டasymmetric cryptography முறையை அடிப்படையாக கொண்டது.இது அனைத்து இலத்திரனியல் கருவிகளையும் ஒருங்கிணைக்கும் முறையாகும்.இவற்றுள் கணணி தொலைபேசி , ஸ்மார்ட் போன்கள் என அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து பாவனையாளர் விபரங்களை கையாளும் முறை தான் இந்த OneID
OneID ஆனது மேம்படுத்தப்பட்டasymmetric cryptography முறையை அடிப்படையாக கொண்டது.இது அனைத்து இலத்திரனியல் கருவிகளையும் ஒருங்கிணைக்கும் முறையாகும்.இவற்றுள் கணணி தொலைபேசி , ஸ்மார்ட் போன்கள் என அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து பாவனையாளர் விபரங்களை கையாளும் முறை தான் இந்த OneID
இதை இலகுவாக சொல்லுவது என்றால் பொருட்களை இணையத்தில் கொள்வனவு செய்த பின்னர் billing address, visa number என எதுவும் இன்றி OneID checkout buttion மூலம் கிளிக் செய்தால் போதும்.
இவ் வசதியை பயன்படுத்தும் போது கணணி உங்கள் செயற்பாட்டு நிலை கருவிக்கு (உதாரணமாக தொலைபேசி) ஒரு கோரிக்கை அனுப்பும். நீங்கள் அக்கருவியில் அனுமதித்தால் கணணி உங்களை உள்ளிக்கும். உங்களிடம் தொலைபேசி இல்லை என்றால் pin இலக்கம் மூலம் அனுமதிக்கலாம்.
OneID இன்று பீட்டா நிலையில் உள்ளது. இதற்குரிய developer மென்பொருள் அண்மையில் வெளியிடப்பட்டது
இம்முறை சாத்தியமாகிய பின்பு facebookஇல் ஒரே ஒரு பொத்தான் மட்டும் இருக்கும், ஒரு கிளிக் மூலம் உள் நுழையலாம். ஆனாலும் facebook மூலம் பல தளங்களில் உள் நுழைய வேண்டி இருக்கும். ஏனெனில் அத்தளங்கள் உங்கள் சுய விபரம், நாடு நகரம், profile photo போன்றவறை அணுகவேண்டி இருப்பதாகும்.
நீங்களும் இத்தளத்தில் வடிவமைப்பாளர் என்ற முறையில் இத்திட்டத்தை உங்கள் வலை பக்கத்தில் பரிசோதனை முறையாக இணைக்கலாம்.
இந்த திட்டம் இயங்கும் முறை பற்றிய சிறு விவரணம்:
இதற்கு முழு ஆதரவு: Microsoft BizSpark
இத்திட்டம் Microsoft BizSpark உடன் மூன்று வருட ஒப்பந்தத்தில் இணைந்து உள்ளது. எனினும் இது opensource முறைக்கு பூரண ஆதரவு நல்கின்றது.
நீங்களும் இன்றே இங்கு விஜயம் செய்து oneID வெளியாகும் அறிவிப்பை பெறுங்கள் sign up today.
நீங்களும் இன்றே இங்கு விஜயம் செய்து oneID வெளியாகும் அறிவிப்பை பெறுங்கள் sign up today.
உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களை வலுப்படுத்தும்