Home » » இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 5 (நிகழ்நேர பராமரிப்பு + கண்காணிப்பு)

உங்கள் இணைய பக்கங்களை நிகழ் நேரத்தில் பார்வையாளர்களை கண்காணிப்பது, தளத்தில் ஏற்படும் பிழைகளை சரி செய்வது தளத்தை பிரபல்யபடுத்துவது தொடர்பாக பார்ப்போம். இவற்றை செய்வதற்கு மென்பொருட்கள் மட்டும் அல்ல பல இலவச இணைய தள சேவைகளும் உள்ளன.இவை உங்கள் தளத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.


 நாங்கள் ஏற்கனவே 4 பகுதிகளில் இணைய பக்கம் ஆரம்பிப்பது தொடர்பாக பார்த்து விட்டோம். அதன் தொடர்ச்சியாக ஆரம்பித்த பக்கத்தை பராமரிப்பது தொடர்பாக இப்பதிவின் ஊடாக பார்ப்போம்.

முன்னைய பதிவுகள்:

  1. இணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -1 (அறிமுகம்)
  2. இணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -2 (இலவச சேவையகம்)
  3. இணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -3 (மென்பொருள் ஊடான பக்க வடிவமைப்பு)
  4. இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 4 (பாட புத்தகங்கள்)
  5. Show Case of Softwares

நாம் இங்கு கூகிள் வழங்கும் இலவசமான 3 சேவைகள் பற்றி பார்ப்போம். அத்துடன் இன்னும் சில சேவைகள் பற்றியும் அறிமுகப்படுத்துகிறோம்.

நாம் இப்போது   www.tamilcc.co.cc    க்கு மாறிவிட்டோம் ==========================================================================
Google தரும் இணைய பக்கங்களுக்கான இலவச சேவைகள்
:
இச்சேவை பற்றி சிலர் அறிந்து இருப்பீர்கள். இது உங்கள் வலைப்பூவில் உள்ள Stats பகுதியை ஒத்தது. ஆனாலும் வேறுபட்டது.இச்சேவை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

பல வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இச்சேவை முற்றிலும் இலவசமாகும். அத்துடன் அண்மையில் நிகழ் நேர பார்வையாளர் கண்காணிப்பு வசதியும் அறிமுகப்படுத்த பட்டது.

Goolge Analytics Home என்ற தளத்திற்கு விஜயம் செய்து உங்கள் பாவனையை ஆரம்பியுங்கள்.

  • செயற்படுத்தல் முறை: Click here to step by step guide
  • உங்கள் வலைப்பூவில் இச்சேவையை இணைக்க உங்களுக்கு வழங்கப்படும்  Google Analytics property ID இனை உங்கள் வலைப்பூவின் setting பகுதியில்  Google Analytics இல் கொடுத்தல் போதுமானது. 
இங்கு கிடைக்கும் வசதிகள்:
  1. நிகழ் நேர பாவனையாளர் கண்காணிப்பு
  2. உங்கள் விளம்பர தெரிவுகளை கண்காணித்தல்
  3. நாளாந்த பார்வையாளர்களின்
  • நாடு
  • கணணி இயங்கு தளம் 
  • தளத்தில் செலவழித்த நேரம்.
  • மீண்டும் மீண்டும் வந்த தடவைகள்
  • கையடக்க தொலைபேசி வருகை கண்காணிப்பு.
இவ்வாறு பல விடையங்களையும் அறியலாம்.

நாம் இப்போது   www.கணணிக்கல்லூரி.co.cc    இலும் உள்ளோம் ==========================================================================
   
 2.

அடுத்து கூகிள் வெப்மாஸ்டர். இது முதல் சொன்னது போன்று பார்வையாளர் உளவறியும் பகுதி அல்ல. இது உங்கள் தளத்தை கண்காணித்து அதாவது தள வடிவமைப்பு பகுதியை கண்காணித்து அதில் ஏற்பாடும் தவறுகளை உங்களுக்கு சுட்டி காட்டும் உதாரணமாக உங்கள் செயல் இழந்த links, HTML  தவறுகள், போன்றவற்றை சரி செய்ய உதவிடும்.

இச்சேவையின் முக்கிய பயன்பாடு, உங்கள் தளத்தோ கூகிள் seach பகுதியில் இணைத்தல் ஆகும். இதன் மூலம் மட்டுமே உங்கள் தளத்தின் உள்ளடக்கம் கூகிள் தேடல் பகுதியில் இடம் பெற வைக்க முடியும்.
{உதாரணமாக கணணி என்று தேடினால் எங்கள் தளமே முதலாவதாக பட்டியல் படுத்தப்படுகிறது. (நம்பவில்லையா ? இங்கே கிளிக் செய்க) }இதற்காக நாம் தான் கணணி என்ற சொல்லை உருவாக்கினோம் என்று அர்த்தமா? அது இல்லை, எங்கள் தளம் முழுமையாக கூகிள் seach பகுதியில் கூகிள் வெப்மாஸ்டர் மூலம் இணைக்க பட்டுள்ளது.


இதை விட உங்கள் தளத்திற்கு அதிகளவில் தேடப்பட்ட சொற்களையும் இது பட்டியல் படுத்துகிறது. (இதில் கொடுமை என்னவென்றால் "செக்ஸ் " என்று தேடினாலும் எம் தளம் முதல் மூன்று இடங்களில் இடம் பிடிக்கிறது. இதன் மூலமே தேடல் ஊடக 80%  பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். இங்கே பாருங்கள், ஏன் இந்த கொடுமை என்று புரியும்).


அதுமட்டுமல்ல,உங்கள் தளம் ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டு உள்ளதா, அதிகளவில் தேடப்பட்ட சொற்கள் என்ன, இது போன்ற பயனுள்ள தகவல்களை தருகிறார்கள்.
இங்கு கிடைக்கும் மேலதிக சேவைகள்:

  • Content Analysis
  • Top Query Strings
  • URL Removal You can use Webmaster Tools to remove a page from Google's index that has already been indexed but that you now wish wasn't.
  • Backlink Text
  • Backlinks Count Webmaster Tools will tell you precisely how many pages out there, link to your home page
  • Sitemaps - Tell Google About All Your Pages

இதை செயற்படுத்துவது எப்படி?


  1. உங்கள் கூகிள் கணக்கை பாவித்து இங்கே உள் நுழையுங்கள்.
  2. உங்கள் தளத்தை இணையுங்கள்.
  3. வலைப்பூவிற்கு சிறந்தது meta tag மூலமான உறுதி படுத்தல் ஆகும். அதில் உள்ள வழிகாட்டலின் படி உங்கள் தளத்தை உறுதி படுத்துங்கள்.
  4. சில மணி நேர்த்தில் தளம் பற்றிய பூரண அறிக்கை உங்களுக்கு கிடைக்கும் 

மூன்றாவது கூகிளின் இலவச சேவை மற்றும் இன்னும் சிறப்பான இணைய பக்க கண்காணிப்பு தொடர்பான தளங்களுடன் எமது அடுத்த பதிவு வெளியிடப்படும். 
                       
இப்பதிவு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், இவை எமது எதிர்கால பதிவுகளை சிறப்புற உதவும்.


                          Keep in Touch