கென்ஸ்பெல்ட் செயன்முறை: Ganzfeld experiment
காரணம் என்னவெனில் மனமானது உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறது. எனவே உணர்வதற்கு குறைவாக உள்ளபோது (பிங் பாங் பந்து மற்றும் இசை இதற்குத்தான்) மூளை புதிதாக புனைந்து உருவாக்குகிறது.
இது பற்றி தமிழ் விக்கிபீடியா கூறுவதையும் பாருங்கள்.
நம்ப முடியாத சுருங்கும் வலி:
இது ஒரு பலம் வாய்ந்த வலி நிவாரணி. அது தான் பிற்பக்கம் திருப்பிய இருவிழியன் (binoculars). தனது புண் உள்ள கையை இருவிழியனின் பிழையான பக்கத்தால் பார்க்கும் போது, கை சிறிதாக தெரிவதுடன், வலி குறைவது மட்டும் அன்றி வீக்கம் குறைவதாகவும் ஆராய்ச்சிகள் நிருபித்து உள்ளன.இது உடம்பின் அடிப்படை உணர்வுகள் கூட நாம் இதை பார்க்கிறோம் என்பதில் இருந்து மாறுகின்றது என்பதை விளக்குகிறது.
அடுத்த முறை நீங்கள் காயப்படும் போது காயத்தை பார்க்காது அவ்விடத்தை விட்டு வேறு ஓரிடத்தை பாருங்கள். நல்ல பரிகாரமாக அமையும்.
நீளும் மூக்கு மாயை : Pinocchio illusion
இதற்கு இரு கதிரைகள், ஒரு கண் கட்டு தேவை.
கண் கட்டப்பட்டவர் பின்னால் உள்ள கதிரையில், முன்னாள் உள்ளவரின் பின் பக்கத்தினை பார்த்தபடி அமர வேண்டும். பின் முன்னால் உள்ளவரின் மூக்கை ஒரு கையாளும், தன் மூக்கை இன்னொரு கையாளும் சம நேரத்தில் தொட வேண்டும்.ஏறத்தாழ ஒரு நிமிடத்தின் பின் பலர் தமது மூக்கு நம்ப முடியாத அளவு நீண்டதாக கூறுவார்கள்.