Home » » மூளையை ஆளும் உணர்வுகளை நாமே உருவாக்குவோம்

உங்கள் மூளையை கட்டுப்படுத்தி போதை தரும் உணர்வுகளை அல்லது விசித்திரமான அல்லது வலியை போக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பும் முறை பற்றி பார்ப்போம். இவை விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டது.மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகளின் முடிவுகள் இங்கே.



கென்ஸ்பெல்ட் செயன்முறை: Ganzfeld experiment


முதலில் இது உங்களுக்கு விசித்திரமாக வேடிக்கையாக தோன்றும். முதலில் ஒரு நிலையான இசையை கேட்கும் வண்ணம் உங்கள்  இசை கருவியை செயற்படுத்துங்கள். பின் படுக்கையில் சாய்ந்து கண்கள் இரண்டிற்கும் அரைவாசி வெட்டிய பிக் பொங் பந்துகளை (அல்லது இது போன்ற) வைத்து ஒட்டுங்கள்.சில நிமிடங்களுள் நீங்கள் வித்தியாசமான பிறழ்வு பட்ட புலனுனர்வுகளை உணர தொடங்குவீர்கள்.சிலர் மேக கூட்டத்தின் இடையே பாயும் குதிரைகளையும், இன்னும் சிலர் இறந்துபோன உறவினர்களின் குரலையும்கேட்பர்.
காரணம் என்னவெனில் மனமானது உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறது. எனவே உணர்வதற்கு குறைவாக உள்ளபோது (பிங் பாங் பந்து மற்றும் இசை இதற்குத்தான்) மூளை புதிதாக புனைந்து உருவாக்குகிறது.
இது பற்றி தமிழ் விக்கிபீடியா கூறுவதையும் பாருங்கள்.



நம்ப முடியாத சுருங்கும் வலி: 


இது ஒரு பலம் வாய்ந்த வலி நிவாரணி. அது தான் பிற்பக்கம் திருப்பிய இருவிழியன் (binoculars). தனது புண் உள்ள கையை இருவிழியனின் பிழையான பக்கத்தால் பார்க்கும் போது, கை சிறிதாக தெரிவதுடன்,  வலி குறைவது மட்டும் அன்றி வீக்கம் குறைவதாகவும் ஆராய்ச்சிகள் நிருபித்து உள்ளன.இது உடம்பின் அடிப்படை உணர்வுகள் கூட நாம் இதை பார்க்கிறோம் என்பதில் இருந்து மாறுகின்றது என்பதை விளக்குகிறது.
அடுத்த முறை நீங்கள் காயப்படும் போது காயத்தை பார்க்காது அவ்விடத்தை விட்டு வேறு ஓரிடத்தை பாருங்கள். நல்ல பரிகாரமாக அமையும்.


நீளும் மூக்கு மாயை :  Pinocchio illusion


இதற்கு இரு கதிரைகள், ஒரு கண் கட்டு தேவை.
கண் கட்டப்பட்டவர் பின்னால் உள்ள கதிரையில், முன்னாள் உள்ளவரின் பின் பக்கத்தினை பார்த்தபடி அமர வேண்டும். பின் முன்னால் உள்ளவரின் மூக்கை ஒரு கையாளும், தன்  மூக்கை இன்னொரு கையாளும் சம நேரத்தில் தொட வேண்டும்.ஏறத்தாழ ஒரு நிமிடத்தின் பின் பலர் தமது மூக்கு நம்ப முடியாத அளவு நீண்டதாக கூறுவார்கள்.


நீங்களும் உங்கள் உணர்வுகை இங்கே பகிருங்கள்...