Google search இல் நுணுக்கமாக தேட பல வழிகள் உண்டு என்று நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக "
மின் புத்தகம்" Site:www.tamilcc.com என்று தேடினால்கணணிக்கல்லூரியில் பகிரப்பட்ட மின்புத்தகங்கள் தொடர்பான விடயங்களை பெற முடியும். அதே போல ட்விட்டரிலும் தேட முடியும்.ஆனால் சில சிக்கலான தேடல்களை Search Operators மூலம் நிகழ்த்த முடியும். கீச்சர்கள் அறிய வேண்டிய அனைத்து Search Operators பற்றியும் இப்பதிவில் காணுங்கள்.
Search Operators என்றால் என்ன?
நமது தேடல்கள் துல்லியமாக அமைய தேடும் சொல்லுக்கு மேலதிகமாக பொருத்தமான சொற்கள் தான் இவை.
Search Operators இன் நன்மைகள்
கீச்சுலகத்தில் பல Apps உண்டு. உதாரணமாக Auto follow back, Autoshare இப்படி. இவை அனைத்தும் ட்விட்டர் API (v1.2) மூலம் இயங்குகின்றன. இதில் பல மட்டுப்பாடுகள் உண்டு. இவற்றால் இறந்த காலங்களில் தேட முடியாது. அதே போல
twitter.com/search-advanced இல் பழைய கீச்கிக்களை "மட்டும்" தேட முடியாது. இதற்கு தான் அதிகளவில் Search Operator பயன்படுகின்றது.
எப்படி பயன்படுத்துவது?
twitter.com/search-home இல் சென்று தேடும் சொற்களுக்கு மேலதிகமாக இந்த Search Operators களையும் இட்டு தேடுங்கள்.
Operator |
Finds tweets... |
Technology search | containing both "Technology" and "search". This is the default operator. |
"Tamil Technology" | 'Tamil Technolog' என்ற சொல்லை கட்டாயம் கொண்ட கீச்கிக்கள் . |
அணில் OR விஜய் | அணில் அல்லது விஜய் என்ற ஏதாவது ஒரு அல்லது இரு சொற்களையும் கொண்ட கீச்சுக்கள் |
அணில் -தளபதி | அணில் என்ற சொல்லை கொண்ட ஆனால் தளபதி என்ற சொல்லை கொண்டிராத |
#OnlyNRIcando | containing the hashtag "OnlyNRIcando". |
from:powerthazan | powerthazan ஆல் கீச்ச்ப்பட்டவை மட்டும் |
to:powerthazan | powerthazan க்கு ஏனையவர்களால் கீச்சப்பட்டவை |
@sweetsudha1 | sweetsudha1 னை சார்ந்த கீச்கிக்கள் (mention) |
"happy hour" near:"chennai" | containing the exact phrase "happy hour" and sent near "chennai". |
near:san francisco within:15mi | sent within 15 miles of "NYC". |
சாக்லேட் since:2010-12-27 | containing "சாக்லேட்" and sent since date "2010-12-27" (year-month-day). |
மூட்டைபூச்சி until:2010-12-27 | containing "மூட்டைபூச்சி" and sent up to date "2010-12-27". |
மூட்டைபூச்சி -கடி :) | containing "movie", but not "scary", and with a positive attitude. |
உப்புமா :( | containing "உப்புமாt" and with a negative attitude. |
உதவி ? | containing "உதவி" and asking a question. |
மின்புத்தகம் filter:links | containing "மின்புத்தகம் " and linking to URLs. |
செய்திகள் source:twitterfeed | containing "செய்திகள் " and entered via TwitterFeed |
உதாரணம்:
என் கீச்சுக்களில் கடந்த வருடம் தை மாதத்தில் மட்டும் கீச்சியவற்றை தேட
from:powerthazan since:2013-01-01 until:2013-01-31 என type செய்ய வேண்டும்.