meteor shower என்றால் என்ன?

வால்மழை (Perseids) என்பது வால்வெள்ளியில் இருந்து விண்கற்களாய் பொழியும் மழை. விண்மீன் தொகுதியில், வால்மழை ஒரு குறிப்பிட்ட தொலைவின் பின் புலனாகும் புள்ளியில் அதனை ஒளிவீசு என்றழைக்கலாகும்.
வால்வெள்ளியின் சுற்றுப்பாதையில் சிதைவுத் துகள்களாய் திரியும் பாய்ச்சலினை வால்வெள்ளி வானம் என்று என்றழைக்கபடும். வால்வெள்ளி வானம் வால்வெள்ளியின் 130 ஆண்டு கோள்ப்பாதை முழுக்க சிதைப் பொருட்களை கொண்டுள்ளன. தற்போது உள்ள பெரும்பாலான வால்வெள்ளி வானங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தாக இருக்கின்றன.
வால்மழை பொழிவை முதலில் கிழக்கு நாடுகளிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டதாகும்.
meteor shower எப்போது காணலாம்?
இந்த வால்மழை ஒவ்வொரு ஆண்டும் நடு-July மாதத்தில் தொடங்கும்; அதன் உச்சம் இடத்தை பொருத்து August 9 இலிருந்து August 14 வரையில் கண்டறியலாம். குறிப்பாக ஆசியா பகுதியில் August 10-13 வரை இரவு வானில் காணலாம். அதிலும் 11 p.m. to 3 a.m வரை காண முடியும். [இதை துல்லியமாக கணிக்க நாசா தரும் Java Applet உதவும். ஜாவா நிறுவப்பட்ட கணனிகளில் ஜாவாவினை இயங்க அனுமதித்து உங்கள் நகரங்களை தெரிவு செய்து பொருத்தமான நேரத்தை கணக்கிடுங்கள்]
இவ்வருடம் இடம்பெற உள்ளவை:
Name | Date of Peak | Moon |
---|---|---|
Quadrantids | Night of January 2 | Sets shortly before dawn |
Lyrids | Night of April 21 | In view most of the night |
Eta Aquarids | Nights of May 4/5 | Early morning crescent |
Perseids | Nights of August 11/12 | Sets after midnight |
Orionids | Night of October 21 | In view most of the night |
Leonids | Night of November 16 | Full |
Geminids | Nights of December 12/13 | In view most of the night |
meteor shower காண முன் நடவடிக்கைகள்
தெளிந்த வானம் வேண்டும். துரதிஸ்டவசமாக இப்போது இலங்கை முழுவது இரவில் மழை பெய்கிறது. சந்திரன் வானில் இல்லை என்றால் இன்னும் நல்லம். உங்கள் கண்களை இருட்டில் காண பழக்க படுத்தி கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்களால் அவ்வளவு தெளிவாக காண முடியாது. இருட்டில் 2 நிமிடம் நின்றாலே போதும்.என்னென்ன தேவை?
இரவு வானில் தனியாக இருங்கள் (?). Binoculars போன்றவை தேவை இல்லை . வெறும் கண்ணால் காணலாம். தேவை எனில் புகைப்படம் பிடிக்க நல்ல Camera உடன் விழித்திருங்கள்.எவ்வாறு தோன்றும்?
இந்த புகைப்படங்கள், கானொளிகளில் காணுக.உதவிகள்:
- விக்கிபீடியா Meteor_shower
- Map - Co-ordinate தகவல்களுக்கு
- நாசா தரும் நேர கணிப்பான்: Estimator