Home » , » Film Rollகளில் உள்ள Nagative படங்களை வீட்டிலே Photo ஆக மாற்றி பார்ப்பது எப்படி?

இதொன்னும் அவ்ளோ பெரிய கண்டு பிடிப்பு இல்லை. ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பதியப்படுகிறது.

இன்று Film Roll camera க்கள் முழுவதும் வழக்கு ஒளிந்து விட்டது. என்றாலும் 2005 க்கு முன்னர் எடுத்த படங்களை புகைப்பட காரர் தரும் போது கூடவே Film roll அதாவது நெகடிவ் என்று சொல்லப்படும் அந்த சின்ன துண்டு சுருள்களையும் தருவார். வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளிச்சம் பட கூடாது என்றெல்லாம் சொல்லுவார்கள். உண்மை தான்.


இன்றும் உங்கள் வீட்டு மூலையில் அந்த சுருள்கள் தமது வாழ்நாளை களித்த படி தான் இருக்கும். நீங்கள் ஒரு தடவை அதில் உள்ளவர்கள் யார் என்று பார்ப்போம் - தேவை என்றால் Develop செய்து அது தான் - கழுவி எடுப்போம்..இல்லை என்றால் அதை தூக்கி வீசி விடுவோம் என்று நினைப்பீர்கள். ஆனால் அதில் உள்ள முகங்கள் நீங்கள் மறந்தவையாக இருக்கும். அத்துடன் அவை Negative நிலையில் உள்ளதால் பார்க்க முடியாமல் இருக்கும்.

Film Roll இல் உள்ள படங்களை நீங்களே வீட்டில் எந்த செலவும் இல்லாமல் மாற்றி பார்ப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

தேவையானவை என்ன?

  • ஒரு Digital  Camera
அது போதுமா?. நிச்சயம். அதுவும் கையடக்க தொலைபேசி  கேமரா என்றால் சிறப்பு. Live ஆக பார்க்கலாம். அல்லது. கொஞ்சம் வேலை கூட.

எப்படி கழுவி எடுப்பது ?

கழுவி இல்லை - develop செய்து பார்ப்பது எப்படி?
Camera வினை ஒன் செய்து விட்டு அதில் உள்ள effect பகுதியில் போய் Negative என்ற option னை தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தும் பேய் போல பயங்கரமாக இருக்கும். ஆனால், உங்கள் Film Roll இனை camera  திரையில் பாருங்கள். அழகான புகைப்படமகா தெரியும்.

Effect Option இல்லாத கேமரா என்றால் Film roll இல் உள்ள ஒவ்வொரு Negative film இனையும் photo எடுத்து கணனியில் Photoshop போன்ற மென்பொருட்கள் மூலம் Filter option இல் உள்ள Negative effect மூலம் வர்ண படங்களாக மாற்றி கொள்ளுங்கள்.

இதன் தத்துவம் என்ன?

முள்ளை முள்ளால் எடுக்கும் முறை தான்-
Negative இனை Negative ஆல் பெருக்கினால் positive வரும் என்று சின்ன வயதில் படித்த போது நான் முதல் practical செய்து பார்த்தது இப்படி தான். கணிதத்தில் மட்டும் அல்ல. பௌதிகவியலிலும் பொருந்தும்.

இது பெரிய கண்டு பிடிப்பு இல்லை. இப்படி எத்தனையோ இருக்கிறது.