சுரோடிங்கரின் பூனை - Schrödinger's cat
ஒரு பூனையை ஒரு சீல் செய்யப்பட்ட பெட்டியில் சுவாசிக்கும் வசதியுடன்விடப்படுகிறது. அந்தப் பெட்டியில் தானாகவே சிதையும் ஒரு தனிமம் மிக மிகக் குறைந்த அளவில் வைக்கப் படுகிறது. தனிமம் தானாகவே சிதைகிறது - எப்போதாவது சிதையலாம் அல்லது சிதையாமலும் இருக்கலாம். அப்படி சிதைந்தால் அதிலிருந்து வெளிப்படும் துகள் ஒரு கருவியை இயக்கி அந்தக் கருவி அந்தப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ள ஒரு விஷக் குப்பியை [ நீரில் ஐதரோசயனைடு (HCN) ] உடைக்கும். எனவே தனிமம் சிதைந்தால் விஷம் பரவி பூனை செத்து விடும்..
பெட்டி நன்றாக மூடப்பட்டுள்ளதால் வெளியே பெட்டிக்குள் உள்ள தனிமம் சிதைந்ததா இல்லையா என்று உறுதியாகத் தெரியாது. தனிமம் சிதைந்தால் பூனை செத்து விடும் என்பதால் பூனை சாவதற்கு 50 % சாத்தியமும் பிழைத்திருப்பதற்கு 50 % சாத்தியமும் உள்ளன. பெட்டியத் திறந்து பார்த்தால் ஒழிய பூனை உயிருடன் உள்ளதா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது.
குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி, பூனை உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில் உள்ளது என்னும் முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும்.
ஆனால் அந்த அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது, குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு பார்வையிடுவதால் அறுபடுகின்றது , எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும். இதனை பார்வையாளரின் முரண்தருகுழப்பம் (observer’s paradox) முரண்சிக்கல் என்று அழைக்கப்படும்.
இச்சோதனை Austrian physicist Erwin Schrödinger என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனை ஆகும். இவரின் 126th Birthday இனை கொண்டாடும் வகையில் Aug 12, 2013 அன்று Google Doodle பல நாடுகளில் மாற்றப்பட்டது. ஆனால் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்மாற்றவில்லை.
Schrödinger's cat பற்றி தமிழ் விக்கிபீடியாவில் http://ta.wikipedia.org/s/78
Deja Vu தோற்றப்பாடு
ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும் போது இதே மாதிரி முதலிலேயே நடந்திருக்கிறது என்று மனம் சொல்வதை 'Deja Vu ' என்கிறார்கள். இது ஒரு மனோதத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமா என்பது சரியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இதற்கு எதிர் விளைவை Jamais vu என்கிறார்கள். ஒரு விஷயத்தை, நபரை , வார்த்தையை, காட்சியை, ஒலியை ஏற்கனவே சிலபல முறை கேட்டுப் பழகி இருந்தாலும் அது என்ன என்று உடனே முடிவு செய்ய முடியாமல் மூளை குழம்புவது தான் Jamais Vu.
இவை இரண்டும் French சொற்கள். Deja Vu என்பது already seen என கருத்து படுகிறது. சில சம்பவங்கள் நிகழும் போது மூளை குழம்பி ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்துடன் ஒப்பிடுவதால் நீங்கள் 'நீங்கள் இது ஏற்கனவே நடந்தது" என உணர்கிறீர்கள். வாழ்க்கையில் அவ்வப்போது இவ்வாறான உணர்வுகளால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள்.
இரு விடயங்களும் வேறு பட்ட தளம் என்றாலும் அண்மையில் சமூக தளங்களில் இவை பற்றி அதிகம் பேசப்பட்டதால் இப்பதிவு!