உங்களில் பலருக்கு இல்லை,, இல்லை , அனைவருக்கும் சொந்தமாக இணைய பக்கம் வைத்து இருக்க ஆசை.. நவீன உக்திகளுடன் பக்கங்களை வடிவமைக்க விருப்பம்..
இதுக்காக நீங்கள் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருப்பீர்கள்.. ஆனால் அதில் பல வசதிகள் கிடைக்காது..
- சுதந்திர ஜாவா தள மேடை (JS coding full support)
- சொந்த பக்க வடிவமைப்பு.
- சொந்த கோப்புக்களை பதிவு ஏற்றம் செய்ய முடியாமை (file hosting)
- பூரண பதிப்புரிமை இன்மை..
சரி, இலவசமாக Sever space கிடைக்கும் என்று தேடினாலும் ஒரு சில வாரங்களில் காலாவதியாகும் இடம் தான் கிடைக்கும். அரிதாக இலவச இடம் கிடைத்தாலும்
- பக்க வடிவமைப்பில் சிக்கல்.
- உயர் மட்ட HTML அறிவு இன்மை
- சொந்த Domain இன்மை (முக்கியமில்லை)
- Hosting தொடர்பான அறிவு இன்மை
- பாவனையாளர் ஊடாடு நிலை வடிவமைப்பில் சிக்கல்.
- Bandwidth, Disk Space
- DataBase,
- SEO Service
இவற்றை எல்லாம் புறம் தள்ளி கூகிள்இல் தேடினால் நிறைய தமிழில் கிடைக்கும். ஆனால் அதில் ஒரு விளக்கமும் கிடைக்காது.. சும்மா web Hosting என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணத்தை ஒரு பக்கம் முழுக்க சொல்லுவார்கள்.. ஆங்கிலத்தில் பல மொழிகளில் தகவல் கிடைத்தாலும் தாய்மொழி போல வருமா?
இதனால் தான் நான் இப்பகுதில் "சொந்தமாக இணைய பக்கம் இலவசமாக ஆரம்பிப்பது எப்படி?" என்ற தலைப்பில் பின்வருவன தொடர்பாக விரிவான பயிற்சி or விளக்க உரை எழுத உள்ளேன்..
- இலவச வரையறை அற்ற சேவர் இடம் பெறுதல் மற்றும் கட்டுப்பாடு
- HTML5 Web2.0 அடிப்படையாக கொண்ட பக்க வடிவமைப்பு
- மென்பொருட்கள் உடனான செயற்பாடு (Adobe DreamWaver CS5 பற்றி சொல்ல மாட்டன்.. பலரும் அதில் முட்டி மோதி இருப்பீர்கள், அத்துடன் அது உயர் பயிற்சியின் பின்னர் தன் பயன்படுத்த முடியும்)
- உள்ளடக்க வடிவமைப்பு
- மேல் ஏற்றுதல் மற்றும் பராமரிப்பு
சில நாட்களுள் பூரண விளக்கங்கள் வழங்கப்பட்டு விடும்.
இதன் முடிவில் உங்களால் சொந்தமாக ஒரு பக்கத்தை இணையத்தில் வெளியிட முடியும் என்பதை எதிர் பார்க்கிறேன்...
பகுதி 2 க்கு செல்ல ...