Home » , , » Twitter Advance Search ஓர் அறிமுகம்

Google search இல் நுணுக்கமாக தேட பல வழிகள் உண்டு என்று நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக "மின் புத்தகம்" Site:www.tamilcc.com  என்று தேடினால்கணணிக்கல்லூரியில் பகிரப்பட்ட மின்புத்தகங்கள் தொடர்பான விடயங்களை பெற முடியும்.   அதே போல ட்விட்டரிலும் தேட முடியும்.ஆனால்  சில சிக்கலான தேடல்களை Search Operators மூலம் நிகழ்த்த முடியும். கீச்சர்கள் அறிய வேண்டிய அனைத்து Search Operators பற்றியும் இப்பதிவில் காணுங்கள்.

 Search Operators  என்றால் என்ன?

நமது தேடல்கள் துல்லியமாக அமைய தேடும் சொல்லுக்கு மேலதிகமாக பொருத்தமான சொற்கள் தான் இவை.

 Search Operators  இன் நன்மைகள்

கீச்சுலகத்தில் பல Apps உண்டு. உதாரணமாக Auto follow back, Autoshare இப்படி. இவை அனைத்தும் ட்விட்டர் API (v1.2) மூலம் இயங்குகின்றன. இதில் பல மட்டுப்பாடுகள் உண்டு. இவற்றால் இறந்த காலங்களில் தேட முடியாது. அதே போல twitter.com/search-advanced இல் பழைய கீச்கிக்களை "மட்டும்" தேட முடியாது. இதற்கு தான் அதிகளவில் Search Operator பயன்படுகின்றது.

எப்படி பயன்படுத்துவது?

twitter.com/search-home இல் சென்று தேடும் சொற்களுக்கு மேலதிகமாக இந்த Search Operators களையும் இட்டு தேடுங்கள்.