Home » » உள்ளூர் வலையமைப்பிலும் ஸ்கைப்


இலங்கை கையடக்க தொலைபேசி வழங்குனர்களில் ஒன்றான எடிசலாட்(Etisalat) நிறுவனம் தற்போது புதிய சேவை ஒன்றினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் பாவனையாளர்களினை எடிசலாட் மூலம் இணைக்கும் சேவையே இது.

skypebannerஉலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் நண்பர்களுக்கு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் எடிசலாட்டின்
இந்த புதிய சேவையின் மூலம் அழைப்பினை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அழைப்பினை மேற்கொள்ள உங்கள் எடிசலாட் தொலைபேசியினூடாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியவரின் ஸ்கைப் பெயரினை 4545 எனும் இலக்கத்திற்கு SMS செய்தால் போதும்.
அவ்வாறு SMS இனை அனுப்பியதன் பின்னர் எமக்கு வழங்கப்படும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் உங்கல் ஸ்கைப் நண்பர்களுடன் பேசலாம்.
இவ்வாறு நீங்கள் அழைப்பினை மேற்கொள்ள வேண்டுமாயின் குறித்த அந்த ஸ்கைப் பாவனையாளர் etisalatlk எனும் பெயரினை தனது contact list ல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
எடிசலாட் நிறுவனத்தின் இந்தச் சேவையானது மிகப் பெரும் வரவேற்பை இலங்கையில் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.


  • skype-call-from-dialog-idd 
  • உலகம் பூராகவும் உள்ள உங்கள் ஸ்கைப்(skype) நண்பர்களுடன் டயலொக்(Dialog) மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நிமிடத்திற்கு 2 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் டயலொக் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றது. எடிசலாட் இதே சேவைக்கு நிமிடத்திற்கு 3 ரூபாய் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.


இந்த சேவையைப் பயன்படுத்தி உங்கள் ஸ்கைப் நண்பர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த இந்த இலகு செயன்முறையினை கையாளவும்.
01. skype இடைவெளி skype user id என்பவற்றை டைப் செய்து 678 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். இந்த SMS ற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது.  Ex.  skype<space>asfereseak to 678
02. நீங்கள் ஒரு குறியீட்டு இலக்கம் ஒன்றினை SMS மூலம் பெறுவீர்கள். Ex. *#52290
03. அவ்வாறு கிடைக்கப்பெற்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஸ்கைப் நண்பருடன் தொடர்பினை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு பெற்ற இலக்கத்தினை save செய்து வைப்பதன் மூலம் பின்பு சாதாரணமாக தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வதுபோல் பயன்படுத்தலாம்.இவ்வாறு ஏற்படுத்தப்படும் அழைப்பினை பெற ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள மறக்க வேண்டாம்.