இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர், ஸிப் பைலை விரித்து, பைல்களை ஒரு போல்டரில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அப்ளிகேஷன் பைலை இயக்கி, இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும். இதன் பின்னர், நாம் அறியாமலேயே இந்த புரோகிராம், கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு டேட்டா அப்லோட் மற்றும் டவுண்லோட் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும். இந்த டேட்டா எங்கிருந்து வந்தது என்ற தகவல் எதனையும் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளாது. எந்த நேரத்திலும், நீங்கள் இதனை இயக்கி, இதன் இணைய தளம் சென்று, உங்கள் இணையப் பயன் பாடு குறித்த தகவல்களைக் காணலாம். http://localhost:2605/என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த தகவல்களைக் காணலாம். இங்கு கிடைக்கும் இன்டர்பேஸில் காட்டப்படும் மானிட்டரில், அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம், கிராபிகல் மற்றும் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History டேப்பில் கிளிக் செய்தால் நீங்கள் பயன் படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். டவுண்லோட் மற்றும் அப்லோட் பார் கிராப் மூலம் காட்டப்படுகிறது. Summary டேப் ஒரு மாதத்தில் நீங்கள் மேற் கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query டேப்பின் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான டேட்டா எவ்வளவு என்று காணலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட டேட்டா டவுண்லோட் அல்லது அப்லோட் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி செட் செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும்.
Calculator என்ற டேப் மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் பைல் இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கம்ப்யூட்டரில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம்.
பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டிய புரோகிராம் இது.