Home » , » சரிந்த கட்டங்களை நேர் ஆக்குவது எப்படி?

நாம் பொதுவாக கட்டிடங்களையோ அல்லது Panorama படங்களையோ எடுக்கும் பொழுது அவை சற்று சாய்வாக தெரிந்து படத்தின் அழகை கெடுக்கும். இதை எப்படி இலகுவாக சரிசெய்யலாம் என பார்ப்போம்.
முதலில் கீழே உள்ள படத்தை பாருங்கள்.



21 mm இல் வைத்து இந்த படத்தை எடுத்தேன். படத்தின் இரண்டு பக்கத்திலும் கட்டங்கள் உள்நோக்கி சரிந்துள்ளது. இதை எவ்வாறு சரிசெய்வது?.
இதற்காக உருவாக்கப்பட்ட எளிமையான மென்பொருள் தான் Panorama Corrector 
முதலில் இந்த தளத்தில் சென்று மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.altostorm.com/download/

இப்போது படத்தை Photoshop இல் திறந்து கொள்ளவும்.

Filter --> altostorm --> Panorama Corrector இல் அழுத்தவும்.

 படம் 1

படம் 1 இல் காட்டியவாறு ஒரு பக்கம் திறக்கும். இங்கு உங்கள் படத்துக்கு தேவையானவாறு Horizontal ஆகவோ Vertical ஆகவோ கோடுகளை select பண்ணவும். நான் Vertical  ஆக select செய்துள்ளேன். இப்போது கோட்டில் அழுத்தினால் புள்ளிகள் தோன்றும். புள்ளிகளை இழுத்து நமக்கு ஏற்றவாறு சரிசெய்து Next அழுத்தவும்.

படம் 2

இப்போது படம் 2 இல் காட்டியவாறு ஒரு பக்கம் திறக்கும்.  Ratio of  dimensions இல் உங்கள் படத்தின் உயரம் மற்றும் அகலத்தை சரிசெய்து கொள்ளலாம். Next ஐ அழுத்தவும்.

படம் 3

இப்போது படம் 3 இல் காட்டியவாறு ஒரு பக்கம் திறக்கும். இப்போது Run இல் அழுத்தவும்.



தேவையான அளவில் Crop பண்ணவும். சாய்ந்த கட்டங்கள் நிமிர்ந்துவிடும். 

MyFreeCopyright.com Registered & Protected