Home » » Roaming மற்றும் IDD சிறு விபரங்கள் - பல மோசடிகள் - சில நுட்பங்கள்

Roaming மற்றும் IDD  இடையே உள்ள சில குழப்பங்களை தெளிவு படுத்தவும், இதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி விளக்கவும் இப்பதிவு எழுதப்பட்டது. இதில் உள்ள மோசடிகள் பற்றி  பலர் அறிவதில்லை. பலருக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். இங்குள்ள நிபந்தனைகள் நாட்டுக்கு நாடு வேறுபாடும் என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

அண்மையில் ஒரு நண்பர் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் கதைக்க roaming SIM வாங்கலாமா என்று கேட்டார். உண்மையில் அவர் அவ்வாறு கேட்க காரணம் ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவங்களும் போடும் விதம் விதமான விளம்பரங்களே... இப்பதிவில் srilanka வில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மற்றும் கட்டண முறைகளை அடிப்படையாக கொண்டே விவரிக்கிறது. எவ்வாறாயினும் அனைத்து நாடுகளிலும் இந்த மோசடிகள் இருக்கும். உங்களுக்கு பொருத்தமான முறையில் உங்கள் நாட்டுடன் பொருத்தி பாருங்கள்.

IDD - International Direct Dialing 


இது பலரும் அறிந்த ஒன்றும். நாட்டுக்கு நாடு  அழைக்கும் சேவை.போட்டியான சூழலில் அனைத்து முற்கட்டண (prepaid) இணைப்புகளிலும் மேலதிக கோரிக்கை இல்லாமல் கிடைக்கிறது. அதிலும் ஒரே சேவை நிறுவனம் பல நாடுகளில் இருந்தால் மிக மலிவான கட்டணத்தில்  கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள்.

உதாரணமாக இலங்கையிலும் இந்தியாவிலும் Airtel நிறுவனம் இருப்பதால் இலங்கை 2 இந்தியா வெறும் 1 ரூபாய் தான் நிமிடத்துக்கு. இப்படி தான் விளம்பரம் செய்தார்கள்.இலங்கைக்குள் அழைப்பு எடுப்பதற்கும் 1 ரூபாய் தான் . நானும் இதை நம்பி ஒருவருக்கு  30 நிமிட budget இல் அழைப்பை எடுத்தேன். 30 ரூபாய் மீதி உடன் அழைப்பை ஆரம்பித்த போதும் 3 நிமிடத்தில் அழைப்பு நின்று விட்டது. கூடவே 30 ம் போய் விட்டது. பின்பு தான் தெரிந்தது.

ஒரு நிமிட அழைப்பு : 1 Rs
Vat (வரி):  21%
இதற்கும் மேலே வெளிநாட்டு அழைப்புகளுக்கு விசேடமாக நிமிடத்துக்கு 5 Rs வரியாம்.

இதெல்லாம் எதற்கு? அரசாங்கம் Skype பாவனையால்  பாதிக்கப்பட்டு  விட்டது. இதை ஈடு கட்ட தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள்.  இதில் செக்கன் அடிப்படையில் கட்டணம் என்றால் நிமிடத்துக்கு 30 ரூபாயாம். இதை விட Rynga போன்ற  VoIP சேவைகளில் குறைவான கட்டணத்தில் கதைக்கலாம்.

நான் அறிந்ததில் அதி கூடியஅழைப்பு கட்டண தொகையாக 150 Rs இனை Greenland தீவுக்கு நிமிடத்துக்கு கழிக்கிறார்கள்.

மொத்தத்தில் உள்நாட்டில் இருப்பவர்கள் வெளி நாட்டுக்கு கதைக்க skype தான் சிறந்த வழி.. என்றாலும்  Broadband க்கும் பகல் கொள்ளை தான்.

அப்படி என்றால் எதற்கு உங்கள் mobile இல் உள்ள IDD வசதி பயன்படும்? எனக்கு இவ்வாறு பயன்படுகிறது: யாரவது ஒரு நண்பரை Skype இல் அழைக்க வேண்டும் என்றால் அவரின் Mobile இலக்கத்துக்கு ஒரு Miss call. அவரும் வருவார் என்பதை உறுதி படுத்த ஒரு miss call அடிப்பார். கொஞ்சம் தாமதம் ஆகும் என்றால் 2 miss call வரும். இப்படி Morse குறியீட்டு முறை போல எனக்கென்று ஒரு முறை.

இதிலும் கவனம் தேவை நண்பர்களே,
ஒரு Miss callஇல் இரு Ring களுக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏன்  என்றால் மேலைத்தேய நாடுகளில்  இரு தடவைகளுக்கு மேற்பட்ட அழைப்புகள் தானாக Voice record க்கு செல்லும். பொதுவாக 2. ஆனால் நிச்சயம் நாட்டுக்கு நாடு மாறுபடும். சரி Record க்கு சென்றால் என்ன ????  record க்கு சென்றாலும் உங்கள் கணக்கில் அது அழைப்பாகவே கருதப்பட்டு பணம் பறிக்கப்படும். இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த ஒன்று. Miss call கூட இப்பொழுது ஒரு Message தான்.

Roaming


நான் எழுத வந்ததே இதை பற்றி தான். பொதுவாக Roaming பற்றி அனைவருக்கும் அறிவு குறைவு. இதுவே பலர் ஏமாற்றம் அடைய காரணம் ஆகிறது.

Roaming என்றால் என்ன?


Wikipedia வில் இவ்வாறு இருக்கிறது : In wireless telecommunications, roaming is a general term referring to the extension of connectivity service in a location that is different from the home location where the service was registered.
நீங்கள் உங்கள் தாய் நாட்டில் இருந்து தற்காலிகமாக வேறு ஒரு நாட்டுக்கு செல்கிறீர்கள். உங்கள் தொலைபேசியும் கூடவே வருகிறது. நீங்கள் செல்லும் நாட்டில் இருந்து உங்கள் தொலை பேசிக்கு புதிய அந்நாட்டு சிம் வாங்க முடியாது. பல நாடுகளில் பல ஆவணங்கள் கேட்பார்கள்.  (சில விமான நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் தற்காலிக இணைப்புகள் வழங்கப்படுகின்றன ). அப்படி மாற்றினாலும் உங்கள் பழைய இலக்கத்துக்கு வரும் அழைப்புகளை நிச்சயம் நீங்கள் இழப்பீர்கள். எனவே உங்கள் பழைய இணைப்பை  அதே இலக்கத்துடன் புதிய நாட்டிலும் பயன்படுத்தும் சேவை தான் Roaming.  இப்போது நீங்கள் Roaming இனை செய்யற்படுத்தி இருந்தால் எந்த மேலதிக செட்டிங்கும் செய்யாமல் வழமைபோல அழைப்புக்கள் மட்டும் இன்றி இணையத்தையும் பயன்படுத்தலாம். ஆனால் மிக மிக உயர்வான கட்டணங்கள் அறவிடப்படும்.

உதாரணமாக நீங்கள் ஒலிம்பிக் பார்க்க London சென்று இருந்தால் அங்கிருந்து இலங்கைக்கு அழைக்க ஒரு நிமிடத்துக்கு வரி நீங்கலாக 150 Rs. வேறு நாட்டுக்கு என்றால் இன்னும் பல மடங்கு. SMS 30Rs + tax.

Roaming என்பது உள்நாட்டவர் வெளி நாடு செல்லும் போது பயன்படுத்தவே ஆகும்.  உள்நாட்டில் உள்ள ஒருவர் வெளிநாட்டுக்கு கதைக்க அல்ல.

  • ஒரு போதும் Roaming இணைப்பை உள்நாட்டில் பயன்படுத்த முடியாது.
  • உங்களுக்கு அழைப்பவருக்கு உள்நாட்டு கட்டணமே அறவிடப்படும். (1 rs). மிகுதி முழுவது உங்கள் தலையில் விழும். அதாவது Incoming charge. இதுவும் ஏறத்தாள outing கட்டணத்துக்கு ஒப்பானது.

Roaming இன் நன்மை என்ன?


நீங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உங்கள் SIM இனை அடிக்கடி கழற்றி மாற்ற தேவை இல்லை. எந்த செட்டிங்கும் செய்ய தேவை இல்லை. இப்போது தானாகவே பொருத்தமான Network தெரிவு செய்யப்படும். உங்கள் பழைய - சொந்த இலக்கத்துக்கு வரும் அழைப்புகள் எவ்வித இடையூறும் இல்லாமல் எங்கிருந்தாலும் கிடைக்கும்.

Roaming  யாருக்கு பயன்படும்?

Business செய்யும் முதலாளிகளுக்கு. அதாவது நாடு விட்டு நாடு சென்று  பயணம் செய்யும் மிகப்பெரும் முதலாளிகள் மட்டும் இதை பயன் படுத்துங்கள். இதில் இழப்பதை உங்களால் மட்டுமே ஈடு செய்ய முடியும்.

Roaming  யார் பயன் படுத்த கூடாது?

வெளிநாட்டில்  சுற்றுலா செல்பவர்கள்; நீங்கள் தங்கும் hotel இல் சகல வசதியும் இருக்கும். வேலை செய்ய செய்பவர்கள்; உங்களுக்கு ஓய்வு நேரமே கிடைக்காது. பிறகு இது வேறயா?  நிரந்தரமாக தங்க செல்பவர்கள்: உங்களுக்கு அங்கு வேறு ஒரு வலையமைப்பு தயராகிறது. பழைய பந்தங்களை விட்டெறியுங்கள். மொத்தத்தில் பெரும் முதலாளிகள் தவிர வேறு எவரும் இதை சிந்திக்கவே கூடாது.


Roaming ற்கான அடிப்படை தேவைகள் என்ன?


பெரும்பாலும் அனைத்து prepaid இணைப்பிலும் கிடைக்கிறது.Postpaid என்றால் சில படிமுறைகள் உள்ளன. இதை விட முக்கியம் பண மீதி பல ஆயிரங்களில் தேவை.

Roaming கட்டணங்கள் அதி கூடியதாக  இருக்க என்ன காரணம்?

நீங்கள் உங்கள் தொலைபேசியில் இருந்து அழைப்பை எடுக்கும் போது அதை நீங்கள் உள்ள நாட்டில் உள்ள வேறு ஒரு வலையமைப்பே பெரும். 1.அது ஒரு Outgoing call;  அவ்வாறே உங்கள் நாட்ட்டுக்கு அழைப்பு மாற்றப்பட்டு மீண்டும் உங்கள் நாட்டில் இருந்து அழைக்க வேண்டிய நாட்டுக்கு அழைப்பு அனுப்படும் செயல்களுக்காக தான் இப்படி உயர் கட்டணங்கள். அதாவது வலையமைப்பு விட்டு வலையமைப்புக்கு தாவுதலுக்காக தான்.

Roaming இன் மாற்றீடு என்ன?


இப்போதெல்லாம் விமான நிலையங்களே இணைய இணைப்புடன் பல வசதிகளை தருகின்றன. எங்கிருந்து வேண்டும் என்றாலும் Skype இனை பயன்படுத்துங்கள்.


இதை விட இன்னுமொரு சேவையும் இப்போது கிடைக்கிறது. அதாவது விமானத்தின் உள்ளும் நீங்கள் உங்கள் mobile மூலம் அழைப்புக்களை எடுக்கலாம். அதுக்கும் இன்னும் special rate... அடிக்கடி பறப்பவர்கள் இதை பற்றி சொல்லுங்களேன்...


இப்போது பல நிறுவனங்கள் IDD, Roaming தொடர்பாக இணையத்தில் அனைத்து விபரங்களையும் வெளியிட்டு விட்டனர். சில இணைப்புகள் .

Srilankan Networks:


Indian Networks: