இதற்கு முன் மிக மெதுவான இணைப்பிலும் youtube காணொளிகளை காணும் நுட்பத்தை பகிர்ந்து இருந்தேன். இப்போதும் அதே நுட்பத்தில் அதாவது mobile இல் தரவிறக்குவது போன்ற முறையில் கணனியில் இணைய பக்கங்களை காணும் முறையை காண்போம்.
இங்கே காண்க: மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch YouTube streaming in Slow Internet Speed
மெதுவான இணைப்பிலும் இயங்கும் ஒரு உலாவி என்றால் அது opera தான். ஆனால் opera கையடக்க தொலைபேசிகளிலே இயங்குவதில் பிரபலம் மிக்கது. java வினை கொண்ட எந்த mobile இலும் இயங்குவது இதன் சிறப்பு.
இதே opera நிறுவனம் developing தேவைகளுக்காக அறிமுகப்படுத்திய Opera Mobile Emulator என்ற மென்பொருள் மூலமே மெதுவான இணைய இணைப்பிலும் விரைவான இணைய உலாவல் மேற்கொள்வது பற்றி பார்ப்போம்.
உண்மையில் Opera Mobile Emulator நோக்கம், வெவ்வேறு mobile இல் உள்ள opera mini இல் இணைய பக்கம் எப்படி தோன்றும் என்பதை கணனியில் காண்பதே ஆகும்.
Opera Mobile Emulator நேரடியாக இணைய பக்கத்தை தரவிறக்காமல் தனது serverகளில் தரவிறக்கி பக்கத்தை ஒழுங்காக்கி மிக விரைவாக உங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒரு விரைவான உலாவல் அனுபவத்தை 2G (2.5G) வலையமைப்பிலும் பெற முடியும்.
இதன் மூலம் இன்னும் பல நன்மைகள் உள்ளன.
- விரைவான உலாவல்
- Tracking இல் இருந்து பாதுகாப்பு
- பல வித mobile களிலும் உலாவும் அனுபவம்
- mobile இல் மட்டுமே காண கூடிய பக்கங்களை கணனியில் காண முடிகின்றமை.
- Adsense tricks
Product Site: opera.com/
Download: Direct Download or Cloud Download
சில வேலைகளில் பக்கங்கள் வேறு விதமாக தோன்றினால் Setting > User Agent > Desktop ஆக மாற்றி விடுங்கள்.
மிக விரைவாக வேண்டும் என்றால் அல்லது இணைப்பு மிக மெதுவானது ஆயின் Setting> opera turbo > always on இல் மாற்றி விடுங்கள்.
கவனிக்க: Opera Desktop Browser வேறு , Opera Mobile Emulator வேறு