இப்போது Google பயனாளர் கணக்குகளை ஊடுருவுபவர்கள் அதிகம். Google தளங்களை ஊடுருவுவது கடினம். ஆனால் இலகுவாக உங்கள் கணணியை தாக்கி உங்கள் கடவுச்சொல்லை பெற முடியும். இப்படி பெறுவதை கூட கட்டுபடுத்த தான் Google 2nd step Verification முறை அறிமுகமானது. இது பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.
ஏதோ ஒரு வழியில் உங்கள் Google கணக்கு தாக்கப்படும் போது முன்பு மின்னஞ்சல் எச்சரிக்கை வரும். சில நாடுகளில் SMS எச்சரிக்கையை பயன்படுத்தி இருந்தார்கள். இப்போது அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க கூடியதாக உள்ளது.
- https://www.google.com/settings/security இல் செல்லுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகளை பயன்படுத்தினால் பொருத்தமான கணக்கை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- Notifications பகுதிக்கு செல்லுங்கள். இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே இருக்கும்.
- இப்போது அதன் கீழ் உள்ள Phone பகுதியில் உங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தை கொடுங்கள். சிலசமயங்களில் ஏற்கனவே இருக்கும். இருந்தால் Verify செய்து கொள்ளுங்கள். அதாவது அவர்கள் அனுப்பும் SMS இல் உள்ள 6 இலக்கத்தை பதிவதன் மூலம்.
- verify செய்த பின்னர் Suspicious login attempt பகுதியில் Tick இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி யாரவது Proxy மூலமோ , உங்கள் பழைய password மூலமோ அல்லது வேறு வழிகளில் உள்ள நுழைய முயலும் போது SMS உடனடியாக வரும். உங்கள் கணக்கு பாதுகாக்கப்படும்.