Home » , » Photoshop க்கு போட்டியான இலவச முன்னணி மென்பொருட்கள்

Photoshop பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. Photoshop இன் புதிய Version C7 விரைவில் வெளியாக உள்ளது. Photoshop professional editing தேவைகளுக்கு வெளியாகிறது. இதன் அளவு பெரிதாக இருப்பதோடு , இதன் விலை அனைவருக்கும் இது கிடைப்பதை தடை செய்கிறது. இப்போது Photoshop க்கு போட்டியாக பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. எவ்வாறாயினும் இவற்றில் பலவற்றின் வடிவமைப்பு Photoshop போல இல்லை. அத்துடன், இதன் செயற்பாடுகளும் அவ்வளவு திருப்பதியாக இல்லை. இலவசமாக கிடைக்கும் Photoshop இனை வடிவத்திலும் செய்யற்பாட்டிலும் ஒத்த முன்னணி 5மென்பொருட்களை இப்போது காண்க.


GIMP


Photoshop க்கு அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. ஓரளவு Photoshop இன் இடை முகத்தை கொண்ட மென்பொருள். மிகப்பெரும் tools box இதில் சிறப்பானது. painting , colour correction, cloning, selection என அனைத்துக்கும்  ஏற்றது.

Home Page: www.gimp.org
Download:  Cloud or Direct

Price: Free
Platform: Linux, Windows, Mac

Paint.net



அவ்வளவாக பிரபலம் அடையாத இதில் ஏராளமான வசதிகள் உண்டு. மிகச்சிறிய அளவில் உள்ளது இதன் மற்றுமொரு சிறப்பு. சிறப்பான  selection tools,  curves மூலமான கட்டுப்பாடுகள் போன்வை photoshop இல் உள்ளதை போன்ற வசதிகள் ஆகும்.


Home Page: www.getpaint.net
Download:  Cloud or Direct

Price: Free
Platform: Windows

Inkscape


மேலே உள்ளவற்றை விட சிறப்பானது. Scalable Vector Graphics (SVG) முறையில் சேமிக்க உதவுதல் இதன் சிறப்பம்சம். CorelDraw  வின் தன்மைகளை ஒத்தது.


Home Page: inkscape.org
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Linux, Windows, Mac

Gimphoto



தொழில்நுட்ப ரீதியில் ஏராளமான வசதிகளை கொண்ட இம் மென்பொருள் சற்று பழையது. இதன் update நீண்ட காலமாக வரவில்லை. Desktop color picker
Enhanced text tool, Dynamic brushes போன்றவை சிறப்பானவை.


Home Page: gimphoto.com
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Linux, Windows, Mac


Free Online Photo Editing Services


இணையத்திலும் photos edit செய்ய ஏராளமான இலவச தளங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. உதாரணமாக தரவிறக்க தேவை இல்லை, பரந்து பட்ட Frame, templates போன்ற online resources  இலவசமாக கிடைத்தல் போன்றவை.
  1. photoshop Express
  2. pixlr.com
  3. www.aviary.com
  4. www.splashup.com
இதை விட Picasa பொதுவாக அறியப்பட்ட இணையத்திலும் கணணியிலும் இயங்க கூடிய கூகிள் தரும் இலவச Photo Editing சேவையாகும்