Home » » உங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உடனடியாக அறியவது எப்படி?

Google Map இப்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு அவசிய இணைய பக்கம் ஆகி விட்டது. நெடுந்தூர பயணங்களில் கூட வரும் நண்பனாகிறது. பல இணைய வரைபடங்கள் இருந்தாலும் நமது ஊரின் சந்து பொந்துகள் எல்லாம் அளந்து எமக்கு தூரத்தை தருவது இது மட்டும் தான். அதை விட வேறு சில plugin உதவியுடன் உங்கள் காணியின் பரப்பளவை அளத்தல், கட்டிடங்களின் உயரத்தை அளவிடுதல், நீர்பம்பிகள் அமைக்க பொருத்தமான இடங்களை தெரிவு செய்தல் இப்படி பல வசதிகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் இது பற்றி பலர் அறிந்தது இல்லை. முன்பெல்லாம் 2008 அளவில் எடுத்த புகைப்படங்களே வரைபடமாக இருந்தன. இப்போது அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு உங்கள் வீட்டு பகுதி வரைபடம் புதுப்பிக்கப்படும் போது உடனடியாக அறிவிப்பை பெறுவது எப்படி என்று இந்த பதிவு விளக்குகிறது.


பொதுவாக அனைத்து இடங்களும் புதுப்பிக்கபடுவது இல்லை. உதாரணமாக அண்மையில் முள்ளிவாய்க்கால் பகுதி புதுப்பிக்கப்பட்டது.ஆனால் அதை அண்டிய கிளிநொச்சி பகுதி புதுப்பிக்கப்படவில்லை. கூகிள் மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கோள்கள் முன்னுரிமை அடிப்படையில் வரைபடங்களை எடுக்கிறது.

நீங்களும் உங்கள் இடங்களின் satellite images புதுப்பிக்கப்டும் போது மின்னச்சலில் தகவலை பெற https://followyourworld.appspot.com என்ற தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள்.

இதை கையாள்வது மிக இலகுவானது. ஆனாலும் சில விளக்கம்.

  1. முதலில் நீங்கள் எந்த இடத்தை தெரிவு செய்கிறீர்களோ அவ்விட பெயரை type செய்து தேடுங்கள்.
  2. அடுத்து உங்கள் வீட்டை குத்துமதிப்பாக + அடையாளம் மூலம் தெரிவு செய்யுங்கள். அதன் பின்பு தானாகவே உங்கள் பூகோள நிலையமைப்பு கணிக்கப்படும்.
  3. இப்போது உங்கள் Google account மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலை தானாக அறிவிப்புக்கள் அனுப்பப்படும்.
அவ் இணைய தள இடைமுகம் இது தான்.!!