Home » , » வலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடிவமைத்து இணைப்பது எப்படி? Google Custom Search Engine to Blogger


Google Custom Search Engine பற்றி அறிந்து இருப்பீர்கள். நீங்கள் உங்கள் வலைபூக்களுக்கு Google தரும் Search Engine   Widget மூலம் இதை இணைத்து இருப்பீர்கள். ஆனாலும் இவை பெரும்பாலும் உங்கள் வலைதளங்களில் இருந்து மட்டும் தேடல் முடிவுகளை தருவதில்ல்லை. அத்துடன் இவற்றை உங்களால் வடிவமைக்கவும் முடிவதில்லை. இப்பதிவின் மூலம் உங்கள் தேடும் பொறியை நீங்களே வைடிவமைத்து உங்கள் தளத்தில் இணைப்பது பற்றி அறிய முடியும்.

இப்பதிவை வாசிக்க முதல் Google Search பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- Google Indexing - Google Web Master  பதிவை வாசித்து இருப்பது Site Indexing தொடர்பாக உங்களுக்கு உதவும்.

Google Custom Search Engine (CSE) இன் நன்மைகள் என்ன?


  1. உங்கள் தளத்துக்கே உரியது
  2. நீங்களே உங்கள்  தள வடிவமைப்புடன் ஒத்து போக கூடிய வடிவில் உருவாக்க முடியும்
  3. Adsense மூலம் மிக இலகுவாக தேடல் முடிவுகளுடன் விளம்பரங்களை சேர்த்து பணம் பெற முடியும்.
  4. விரைவானது, பாதுகாப்பானது.

CSE இனை எவ்வாறு பெற்றுக்கொள்வது ?


CSE என்பது மிகப்பெரும் பரப்பு. நீண்ட கோடிங் மூலம் உங்கள் தேடல்களை scripts உதவி உடன் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைக்க முடியும்.ஆனால் அவை இங்கு பொருத்தமற்றவை. எனவே சாதாரணமாக பொதுவான CSE ஐ இணைப்பது பற்றி பார்ப்போம்.

August 03, 2012 அன்று தான் இதன் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது.இதில் இணைக்கும் Script இல் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தனர். இவை asynchronously முறையில் உள்ளதால் பக்க தரவிறக்க நேரத்தில் பெரும்பாலும் செல்வாக்கு செலுத்துவதில்லை. எவ்வித பயமும் இல்லாமல் இதை நீங்களும் இணைக்கலாம்.

முதலில் http://www.google.com/cse/ க்கு செல்லுங்கள். அங்கே New search engine... என்ற பகுதியை தெரிவு செய்யுங்கள்.



இதற்கு மேலே எழுதுவதை விட படங்கள் மூலம் சொல்வது உங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும்.



இப்போது உங்கள் தளத்தை அடையாள படுத்துங்கள்.




இப்போது தேடல் முடிவுகள் எங்கிருந்து பெறப்பட வேண்டும் என்பதை குறிப்பிடுங்கள்.




இப்போது sitemap தொடர்பானது. இது தொடர்பாக Google Web Master tool பகுதியில் பார்த்து இருக்கிறோம்.




இங்கே நீங்கள் உங்கள் வலைப்பூ முகவரி உடன் /feeds/posts/default?orderby=UPDATED இணையும் சேர்த்து கொடுங்கள். உதாரணமாக http://tamilcomputercollege.blogspot.com/feeds/posts/default?orderby=UPDATED என்றவாறு அமையும்.


இப்போது தேடல் முடிவுகள் எவ்வாறு தோன்ற வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.


முதல் படிக்கு ஏற்ப இங்கு வரும் கோடிங்கின் இறுதி பகுதி  மாறுபட்டது.




பொருத்தமான வடிவில் இதை இணைக்க வேண்டும்.

இறுதியாக இதை உங்கள் தளத்தில் இணைக்க வலைப்பூவில் New HTML Widget
ஒன்றில் இறுதி படியில் வரும் ஜாவாஸ்க்ரிப்டை இணையுங்கள். (உங்களுக்கு அவர்கள் கூறுவது போல  Head பகுதியில் இதன் ஒரு பகுதி இணைக்க வேண்டிய தேவை இல்லை. அது வலை பக்கங்களுக்கு பொருந்தும். அத்துடன் இவ்வாறு இணைத்தால் மிக இலகுவாக நீக்கவும் முடியும்.




இப்போது கீழே உள்ள ஒரு வடிவில் உங்கள் தேடல் பொறி காட்சி அளிக்கும்.
நீங்களும் இப்பக்கத்தில் உள்ள அல்லது இங்கே உள்ள தேடும் பொறியில் சும்மா தேடிப்பாருங்கள்

இவை வெறும் அடிப்படை CSE பற்றியே விளக்குகிறது. நீங்கள் விரும்பினால் மேலும் இதை வடிவமைக்க முடியும். developers.google.com இப்பக்கம் உங்களுக்கு உதவி புரியும்.

இதை விட

  1.  Google Analytics பகுதி ஊடாக தேடல்களை கண்காணிக்க முடியும் 
  2. Make money பகுதி ஊடாக Adsense வளம்பரங்களை இணைக்க முடியும்.





நீங்களும் இப்போதே இணைத்து பாருங்கள்...