
Google இணையத்தை பயன்படுத்தும் அனைவரின் அடையாளங்களில் ஒன்றாகி விட்டது. Analytic, Adsense, CSE, Shop, Blogger, Site, Adword, Lab, Database, Cloud, Gmail என எண்ணற்ற வசதிகளை தருகிறது. ஒரே Google Account இன் கீழே அனைத்தையும் பெற முடியும். இதனாலேயே இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் ஆரம்பித்தது. Google API அனைவருக்கும் அறிமுக படுத்தியதன் மூலம் வேறு தளங்களுக்குமான உதவிகள் பெருக ஆரம்பித்தன.அண்மையில் Google தனது பயனாளர்களை உறுதி படுத்த அவர்களது பௌதீக அடையாளங்களை பயன்படுத்த விருப்பம் தெரிவித்தது. கை ரேகை, கருவிழி இப்படி ஏதோ ஒன்று. நிச்சயம் எதிர் காலத்தில் இவ்வாறான முறை பழக்கத்தில் வரும்.