Home » » செய்கை வழியுடன் கணித விடைகள் தரும் இணைய தளம் - A Computational Knowledge Engine

Google என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒரு தேடு தளம். இதன் இதர சேவைகள் மூலம் இது இன்று முன்னையில் திகழ்கிறது. எவ்வாறாயினும் Google தேடல் பகுதியே பிரபலமானது. இங்கே கணக்கு செய்யலாம்... படம் கொடுத்து படம் தேடலாம்... இங்கு அண்மையில் தான் knowledge graph வசதி அறிமுகமானது. ஆனால் ஒரு சொல்; ஒரு கேள்வி; ஒரு கணிதம் இப்படி எது கொடுத்தாலும் நமக்கு சளைக்காமல் பதில் தரும் இணையம் தொடர்பாக  காணலாம்.

 இத்தளம் தான் Wolfram Alpha. இது  தொடர்பாக ஏற்கனவே இங்கு பார்த்து இருக்கிறோம். இத்தளத்தில் இப்போது இன்னும் பல வசதிகள் கிடைக்கின்றன. இத்தளம் பற்றி பலர் அறியவில்லை.

Wolfram Alpha பற்றி சொல்வதாயின் இது ஒரு Computational Knowledge Engine. Google ஒரு Search Engine. இங்கே நீங்கள் எதை பற்றி வேண்டும் என்றாலும் தேடலாம். எந்த ஒரு உயர் கணிதமாகட்டும், ஒரு நபர் ஆகட்டும், இரசாயனம் பொறியியல், புவி விஞ்ஞானம்  கால நிலை, புள்ளி விபரவியல், வரலாறு இப்படி அனைத்தையும் பெற முடியும்.

எவ்வாறாயினும் இது இணைய கணிப்பனாகவே பிரபலம் அடைந்து உள்ளது. இதன் சிறப்பே கணித கேள்விகளுக்கு செய்கை வழியுடன் விடை தருவது தான்!

இதை கையடக்க தொலைபேசியில் கூட பயன்படுத்த முடியும். பரீட்சைகளில் இனி கொண்டாட்டம் தான் ??

இதை பயன்படுத்த பல வழிகள் உள்ளன :

  1. நேரடியாக wolframalpha.com தளத்துக்கு சென்றால் முகப்பில் அழகான தேடல் பகுதி உங்களை வரவேற்கும். ஆனால் அடிக்கடி எங்கு செல்வது சிரமம் என்று நினைப்பவர்கள் இந்த வழியை தவிர்க்கலாம்.
  2. கையடக்க தொலைபேசி என்றால் http://m.wolframalpha.com/
  3. நேரடியா select செய்து right click மூலம் தேட extension உலாவிக்கு கிடைக்கிறது.


இங்கே தேடிய சில முடிவுகளை காணுங்கள்...::

  • ஒரு கணிதம் :Sin  இன் வகையீடு தான் கேட்டேன். ஆனா வந்தது....
  • இந்தியாவில் உள்ள ஒரு நடிகர்
  • தாய் மொழியை பற்றி 
நீங்களும் இவ்வாறு பயனுள்ள இணையத்தில் அவ்வளவாக தெரியாத இணைய பக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...