Microsoft பலத்த எதிர் பார்ப்புடன் Windows 8 இனை அறிமுகம் செய்தது. என்றாலும் Windows 7 பாவனையாளர்களை நிராகரிக்க முடியவில்லை. அத்துடன் Internet Explorer பாவனையை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டி தேவை ஏற்பட்டது. அதனால் Windows 7 பாவனையாலர்களுக்கு IE 10 இனை முற்பார்க்கை நிலையில் நேற்று அறிமுகப்படுத்தியது. அனைத்து Windows 7 பாவனையாலர்களும் இலகுவாக தரவிறக்கி நிறுவக்கூடிய வகையில் இதை வெளியிட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதை நிறுவ பின்வரும் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட கணணி அவசியம்.
Processor
- Computer with a 1 gigahertz (GHz) 32-bit (x86) or 64-bit (x64) processor.
Operating system
- Windows 7 64-bit with Service Pack 1 (SP1) or higher
- Windows Server 2008 R2 with Service Pack 1 (SP1) 64-bit
Memory
- Windows 7 32-bit—512 MB
- Windows 7 64-bit—512
இது அனைத்தும் தான் Chrome, Firefox அனைத்திலும் உள்ளதே, பிறகு எதற்கு IE 10 என்று நீங்கள் கேட்கலாம். இன்றும் கூட வேறு எந்த browsers பாவிக்காத வெறும் IE களை நம்பி இருப்பவர்கள் 60% க்கும் மேல் உள்ளனர். அவர்களுக்காக தான் இந்த உலாவி.
இது தொடர்பான அறிவிப்பு நேற்று Microsoft வலைப்பூவில் வெளியாகியது.
நீங்களும் விரும்பினால் இதை windows.microsoft.com இல் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

