Home » » தொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 3

இந்த வாரமும் கடந்த வாரத்தில் நடை பெற்ற சில முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்கள், செய்திகள் மற்றும் சில தகவல்களுடன் இப்பதிவு மூன்றாவது தடவையாக உங்களை சந்திக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் தொகுத்து தந்து உள்ளேன். பெரிதாக இருந்தால் நீங்கள் சலித்து விடுவீர்கள்  என்பதால் சுருங்க சொல்லி தேவையானவர்கள் - ஆர்வமுள்ளவர்கள் தொடர இணைப்புக்களை வழங்கி உள்ளேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Pakistan's Google Domain, Hack செய்யபட்டது


Google.com.pk  என்ற டொமைன் 2012.11.24 அன்று Hack செய்யபட்டு வேறு ஒரு செய்தி கட்சிபடுத்தபட்டது. Google மட்டும் அன்றி வேறு பல .pkg Domains அனைத்தும் செயலிழக்க வைக்கபட்டது. என்றாலும் சில மணி நேரத்திலே அனைத்தும் பழைய நிலைமைக்கு திரும்பியதாக propakistani என்ற வலைப்பூ செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்கு பெரும்பாலும் துருக்கியர்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிடபட்டது. கடந்த வாரத்தில் மட்டும் அதிகளவான இவ்வாறான தாக்குதல்கள் நிகழ்த்த பட்டமை இணைய பாதுகாப்பு குறித்து அச்சத்தை தோற்றுவித்து உள்ளது.

Windows 8 பாவனையாளர்களை கை விட்ட Google Analytics ?


முன்னணி புள்ளி விபரங்களை வழங்கும் சேவைகளில் ஒன்றாகிய Google Analytic  Windows 8  பாவனையாளர்களை அறிக்கை படுத்தவில்லை என்ற குற்றசாட்டு எழுப்பபட்டு உள்ளது. ஆனால் Google, Windows 8 பயனாளர்களை Windows 8 என்று அடையள படுத்தாமல் NT  என்ற பெயரில் குறிப்பிடுகிறது. இதை மாற்றுவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கபட்டு உள்ளது. நீங்களும் உங்கள் GA இல்  சென்று Audience > Technology > Browser & OS > OS (tab) > Windows   > NT இல் உங்கள் வலைப்பூக்களுக்கும் எத்தனை பயனாளர்கள் Windows 8 இல் இருந்து  வருகிறார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாளுக்கு நாள் Windows 8 க்கு மாறுவோர் அதிகரிக்கின்றனர்.


Jagannatha Hora மென்பொருளின் இற்றைபடுத்தல் வெளியாகியது.


Titleகணணிகல்லூரி அறிமுகபடுத்திய  ஜோதிட மென்பொருள் தான் இந்த Jagannatha Hora.  பல அரிய வசதிகளை இலவசமாக தரும் இம்  மென்பொருளின் புதிய ஒரு  update கடந்த மாதம் வெளியாகியது. பல பிழைகள் திருத்தி சில வசதிகளையும் சேர்த்து வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதை பாவிப்பவர்களுக்கும் புதியவர்களுக்கும் வேறு வேறாக தரவிறக்க முடிகிறது. மேலும் அறிய Vedicastrologer.org க்கு செல்லுங்கள்.

Far Cry 3 வெளி வர தயாராகிறது


Far Cry 3 PAL box art.jpgஇது  open world first-person shooter வகையை சார்ந்த வீடியோ விளையாட்டு ஆகும். ஆபிரிக்க வனப்பகுதியில்  RPG ஏவுகணைகளுடன் தாக்கும் போர் வீரனை கொண்டு கதை நகர்வதாக இதன் முன்னைய பதிப்புக்கள் வெளியாகி இருந்தன. இதன் மூன்றாம் பாகம் November 29, 2012 அன்று ஐரோப்பாவில் வெளியாக உள்ளது. ஆப்ரிக்க சவன்னா புல்வெளி மற்றும்  காடுகளின் வனப்பை அழகாக படம் பிடித்து காட்டியதால்  தான் இவ்விளையாடு வெற்றி பெற்றது என்று சொல்லலாம். இம்முறை தனது காதலியை தேடுவதாக அமைந்து உள்ளதாக விக்கியில்
குறிப்பிட்டு உள்ளார்கள். எப்படி புதிய கதைக்களம் இருக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.. அவர்கள் வெளியிட்ட மூன்றாவது Trailer.. இங்கே

கூகுளின் Transparency Report


Google தன்னுடைய சேவைகள் எப்படி மக்களை அடைகிறது எந்த நாடுகளில் தன்னை தடை செய்து வைத்து உள்ளார்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் தான் எவ்வளவு தரவு பரிமாற்ற அளவுகளை தினமும் வழங்குகிறது என்ற விடயங்களை  Transparency Report என்ற பக்கத்தில் வழங்குகிறது. நீங்களும் google.com/transparencyreport இல் சென்று காணுங்கள்.


இன்னும் சில தகவல்கள்


  • பத்து கோடி பயனாளர்களுடன் Dropbox தனது சேவையை தொடர்கிறது. Google Drive போன்ற சேவைகள் பல இருந்தாலும் தொடர்ந்தும் Dropbox முன்னணியில் இருக்கிறது.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 வெளியான 2 வாரத்திற்குப் பின்னர், அதனை வடிவமைத்த பொறியாளர் குழுவின் தலைவராக இயங்கிய ஸ்டீவன் சினோப்ஸ்கி, நிறுவனத்திலிருந்து விலகி உள்ளார். இது தனது தனிப்பட்ட முடிவு என்று அறிவித்தாலும் யார் பெரியவர் என்ற கேள்வி தான் இவரை பதவி விலக வைத்ததாக சொல்கிறார்கள். (நன்றி:தினமலர்)
  • Call of Duty: Black Ops II கடந்த வாரம் வெளியாகி இதுவரை தனது முந்திய பதிப்புகளை  விற்பனையில்  பின்தள்ளி சாதனை படைத்துள்ளது. 21ம நூற்றாண்டின் பனி போரை மையமாக வைத்து இதன் கதைக்களம் நகர்கிறது.