Home » » தொழில்நுட்ப துளிகள் - இந்தவார முக்கிய தொழில்நுட்ப செய்திகள் - மாற்றங்கள் - 1

முன்பை போல இப்பொழுது பதிவுலகுக்கு அடிக்கடி வர முடிவதில்லை. பெரிதாக சொல்லுவதற்கு நிறைய இருந்தாலும் சொல்ல முடிவதில்லை. தினமும் நடைபெறும் தொழில்நுட்ப மாற்றங்களை சேர்த்து அவ்வப்போது போது வெளியிடலாம் என்று எண்ணி இதை பதிகிறேன். இதில் அனைத்தும் நான் Twitter பக்கத்தில் சொன்னவை தான். பலர் twitter பாவிப்பதே இல்லை. இனி facebook இலும் இதை பகிர முடியும் என நினைக்கிறேன். சில முக்கிய Technology மாற்றங்களை இப்போது பார்ப்போம்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை வெறும் கண்களால் பார்க்க முடியுமா?


ஆம் , பார்க்க முடியும். வானில் சூரியன், சந்திரனுக்கு அடுத்த படியாக பிரகாசமான பொருள்  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தான். இது எத்தனை பேருக்கு தெரியும் ? International Space Station என அழைக்கப்படும் இந்நிலையம் வானில் மிதக்கிறது. இது தொடர்ந்து சுற்றி வருகிறது. அவ்வப்போது உங்கள் தலைக்கு மேலாலும் செல்லும். அவ்வாறு செல்லும் போது நீங்கள் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் எப்போது போகும் என்று தெரியாது. அதை இப்போது NASA, SMS  மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கிறார்கள்.  spotthestation.nasa.gov இல் சென்று உங்கள் இடத்தையும்  தொடர்பு முறையையும் பதிந்தால் போதும். சில மணி நேரத்துக்கு முதல் SMS / Email வரும்.


Blogger ஊடாக Adsense பெறுவதில் சில மாற்றங்கள் 

Adsense எமக்கு வருமானம் தருகிறதோ இல்லையோ Google ளை வாழ வைக்கிறது. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து அதை பாதுக்காக முயற்சிக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் Blogger ஊடாக Adsense பெறுவதில் சில மாற்றங்கள் கொண்டு வர போவதாக தமது Twitter இல் தெரிவித்தார்கள். Blogger  மட்டும் அல்ல அனைத்து Host partner  மூலமான ADSENSE அனைத்தும் மாற்றப்பட உள்ளது. சொந்த Domain வாங்க இருக்கும் Adsense blogger பாவனையாளர்கள் கட்டாயம் இதை வாசியுங்கள். adsense.blogspot.com இங்கு விலாவாரியாக சொல்லி இருக்கிறார்கள்.


 Need For Speed - Most Wanted 2012 வெளியாகியது


அனைவராலும் எதிர் பார்க்கபட்ட   Need For Speed - Most Wanted தொடரின் அடுத்த பதிப்பு october மாத இறுதியில்  வெளியாகியது. 5GB க்கும் மேற்பட்ட அளவில் முற்றிலும் முப்பரிமாண ஒலி , ஒளி  அமைப்புடன் வெளியாகி அனைவரையும் ஆச்சரிய படுத்தியது. Torrent server களில் இலவசமாக கிடைக்கும் இப்பதிப்பு torrent வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்தது. அதாவது இதன் தரவிறக்கம்  இது வரை உள்ள அனைத்து torrent கோப்புக்களை விட முன்னனியில் உள்ளது. இதில் இருந்தே இதன் சிறப்பு தெரிகிறது.




இலங்கை வானொலிகளின் மீள் அலைவரிசையாக்கம்


இலங்கை ஒரு கைப்பிடி தேசம். அதில் 9 மாகாணம், மொத்தம் 27 வானொலி நிலையங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாகாணத்துக்கும் என அலைவரிசைகள். அலைவரிசை தட்டுப்பாடு வந்து விட்டது. இதனால் 0.1 MHZ வித்தியாசத்தில் இரு அலைவரிசைகளை மட்டுமே இலங்கை தொலைதொடர்பு ஆணைக்குழு கடந்த கார்த்திகை முதல் அறிமுகப்படுத்தியது. இதனால் அடிக்கடி பயணங்களின் போது அங்கும் இங்குமாக tune செய்வது தடுக்கபட்டது.  இவ்வாறு புதிதாக மாற்றபட்ட அலைவரிசைகளை இந்த புகைப்படத்தில் காணுங்கள் . இதில் நகைச்சுவை என்னவென்றால் பல சிக்கலைகளை சந்தித்த ஒரு வானொலி சொல்லும் பொய் தான். என் வீட்டில் கூட signal  கிடைக்காத வானொலிக்கு தமிழ் நாட்டில் கூட கேட்பதாக அடிக்கடி பில்டப் கொடுக்கிறார்கள். அங்கிருப்பவர்களுக்கு தான் உண்மை தெரியும். 

இன்னும் சில செய்திகள் 

  • Google Analytic தமது அடுத்த தலைமுறைக்கான Analytic நுட்ப முறைகளை Beta நிலையில் Developers இடம் கையளித்து உள்ளார்கள்.
  • Goolge Cloud DataBase சேவையை Google Cloud SQL என்ற பெயரில்  ஆரம்பித்துள்ளது. 6 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும்.
  • பல நாட்களுக்கு முதல் 11000 virtual tours உள்ளடக்கி 3D படங்களுடன் Google Earth 7 வெளியாகியது .


கணணிக்கல்லூரியும் Angry Bird Star War கேமும்

Angry Bird அவ்வளவு பிரபலமானதா என்று கேட்கலாம்? எனக்கும் Angry Bird Star War வந்த பின்னர் தான் தெரிந்தது. உண்மையில் வயதுவேறு பட்டு இன்றி அனைவரும் விளையாடுகிறார்கள். நான் குறித்த பதிவு தொடர்பாக அறிவித்த பின்னர் GA reports  இல் பெற்ற சில இடை முகங்கள் இதோ. இதற்கு காரணமான அனைத்து கணணிகல்லூரி வாசகர்களுக்கும் நன்றிகள்  







நீங்களும் Celebrities  சை பின்தொடர்ந்து சிக்கலில் மாட்டுவதை விடுத்து சமூக வலைதளங்களில் அறிவு சார்ந்த பக்கங்களை தொடருங்கள். இப்போதெல்லாம் நிலநடுக்கம், சுனாமி குறித்து உடனடியாக SMS தர கூட பல இணைய பக்கங்கள் , Twitter கணக்குகள் உள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

மின்னஞ்சல் வாசகர்களுக்கு..
புதிய  மின்னஞ்சல் சேவை மூலம் பதிவுகளை வழங்க ஆரம்பித்தில் இருந்து சில பிரச்சனைகள் வாசகர்களுக்கு ஏற்பட்டு உள்ளன. அதில் ஒரே பதிவு தினமும் மின்னஞ்சல் செய்யப்படுவது முக்கியமாக அவதானிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆராய்கிறேன். தயவு செய்து பொறுத்திருங்கள். 


தொழில்நுட்பத்தை தொழில்நுட்பத்தால் தொழில்நுட்பமாக கையாளுங்கள்