Home » , » Windows Reboot எதனால் அவசியமாகிறது?

Windows Operation system இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், Windows எதற்கெடுத்தாலும், Reboot செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், Windows இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி Reboot செய்வதால் செம்மைப்படுத்தப் படுகிறது? Reboot  செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.



பொதுவாக, Windows இயக்கத்தில் இருக்கையில், அதன் system File 'களை மாற்றி அமைக்க முடியாது. அந்த Files எல்லாம், செயல்பாட்டில் வளைக்கப்பட்டிருக்கும். அவை விடுவிக்கப்படாத நிலையில், அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள இயலாது.

Reboot என்ன செய்கிறது?

Windows இயக்கம் செயல்பாட்டில் உள்ள Files 'களை update செய்திடவோ அல்லது நீக்கவோ முடியாது. Windows update செயல்பாடு, புதிய update Files 'களைத் தரவிறக்கம் செய்திடுகையில், நேரடியாக, Windows இயக்கத்தில் அதனைச் செயல்படுத்த இயலாது. இயக்கத்தில் இருக்கும் system Files 'களில் எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள இயலாது. எனவே,Operating system நிறுத்தி மீண்டும் இயக்கினால் தான், அவை தானாக மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும். reboot இதனைத்தான் செய்கிறது.
சில வேளைகளில், Files 'களை நீக்கும் போதும் reboot தேவைப்படுகிறது. சில வகையான software  தொகுப்புகளை update செய்திடுகையில் அல்லது நீக்குகையில், reboot அவசியத் தேவையாகிறது. எடுத்துக்காட்டாக, Antivirus program  ஒன்றினை அல்லது Hardware driver  Files 'களை இயக்குகையில், அவற்றின் Files memory யில் ஏற்றப்படுகின்றன. இத்தகைய Files 'களில் update செய்திடுதல் அல்லது நீக்குதல் செயல்பாடு மேற்கொள்ளப்படுகையில், Windows computer 'ரை reboot செய்திட வேண்டுகிறது. system முழுமையாக இயங்கும் முன்னர், இந்த files மாற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வருகின்றன.

Windows Update Reboot: Microsoft Update

Operating System 'ற்கான பேட்ச் Files 'களை அவ்வப்போது வெளியிடுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இவை வெளியாகின்றன. Microsoft  இணைய தளத்தில் இவை கிடைக்கின்றன. அவை தளத்தில் ஏற்றப்பட்டவுடன், நம் computer இணைய இணைப்பு பெறுகையில், தாமாகவே அவை Computer 'ரில் இறங்குகின்றன. பின் நாம் set செய்தபடி, அவை பதியப்படுகின்றன. அவை பதிவு செய்யப்பட்ட வுடன், system Files அப்டேட் செய்திட நம் கம்ப்யூட்டரை reboot செய்தால் தான், புதிய பேட்ச் Files 'களின் செயல்பாட்டினால், system Files மேம்படுத்தப்படும்.
Windows இயக்கம் இந்த patch  கிடைத்தவுடன், உங்களைக் கட்டாயமாக Reboot செய்திடக் கேட்டுக் கொள்ளும். ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான், இந்த patch files தரப்படுகின்றன. எனவே, எவ்வளவு சீக்கிரம் Reboot செய்து, இவற்றை அப்டேட் செய்கிறோமோ, அந்த அளவிற்கு நம் கம்ப்யூட்டர் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. முன்பு XP System' னைப் பாதிக்கும் வகையில் Blaster, Sasser, மற்றும் Mydoom ஆகிய வைரஸ்கள் பரவிய போது, Microsoft ட் patch file 'களைத் தந்து, கம்ப்யூட்டரின் பயனாளரின் அனுமதியைப் பெறாமலேயே computer 'ரை Reboot செயதது. ஏனென்றால், அந்த virus 'களின் தாக்கம் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது. பயனாளர்கள் காத்திருந்து, சில நாட்கள் கழித்து Boot செய்து, அவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தால், patch file 'களின் செயல்பாடு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும்.

Software பதிவதும் நீக்குவதும் மற்றும் மேம்படுத்தலும்

software application program களை install  செய்தாலோ, computer 'ரிலிருந்து அன் install செய்தாலோ, அல்லது அவற்றை உயரிய பதிப்பிற்கு மேம்படுத்தினாலோ, அவை உடனே computer 'ரை reboot  செய்கின்றன. அல்லது செய்திடுமாறு கேட்டுக் கொள்கின்றன. ஏனென்றால், இந்த application 'னுக்கான Files 'களை computer  செயல்பாட்டில் இருக்கும்போதே மாற்ற இயலாது. எடுத்துக்காட்டாக, Antivirus program ஒன்றினைக் computer 'ரில் இருந்து நீக்கினால், அதனைச் சார்ந்த அனைத்து Files 'களும் நீக்கப்பட மாட்டாது. computer 'ரை reboot செய்தால் தான், அனைத்து Files 'களும் நீக்கப்பட்டு, முற்றிலுமாக application அழிக்கப்படும்.

Reboot செய்கையில் Files எப்படி நகர்த்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன?

 பயன்பாட்டில் இருக்கின்ற file ஒன்றை நகர்த்த, வேறு பெயரில் அமைக்க அல்லது அழிக்க, Windows சிஸ்டம் அப்ளிகேஷன் ஒன்றை application developer 'களுக்குத் தருகிறது. இது இந்த செயல்பாட்டிற்கான வேண்டுகோளினை HKLM\System\CurrentControlSet\Control\Session Manager\Pending FileRenameOperations என்ற இடத்தில் registry  யில் எழுதி வைக்கிறது.
Windows Boot செய்கையில், அது registry யைச் சோதனை செய்து, Files செயல்பாட்டிற்கான நடைமுறைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது. இந்த நிலையில் தான், software application ஒன்றை uninstall செய்கையில், நம்மால் அழிக்க இயலாத Files  அழிக்கப்படுகின்றன.
Microsoft  இந்த reboot விஷயத்தை, காலப்போக்கில் குறைத்துக் கொண்டே வந்துள்ளது. reboot செய்வதனை அத்தியாவசியத் தேவையாக அது காட்டுவதில்லை. Windows ட்ரைவர் program 'களை, ஒன்றின் இடத்தில் இன்னொன்றை மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி படைத்துள்ளதாக உள்ளது.இதனால் reboot தேவை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், புதிய பாதுகாப்பு அம்சங்கள், Windows இயக்கத்தினைக் கூடுதல் பாதுகாப்பு உள்ளதாக அமைத்துள்ளது. இதனால், Windows 8 சிஸ்டத்தில், Windows Files update செய்த பின்னரும், reboot செய்திட மூன்று நாட்கள் கால அவகாசம் தரப்படுகிறது.

நன்றி:தினமலர்