Home » » Facebook சந்தித்த 10 திருப்புமுனைகள்

ஓர் எளிய தொடக்கம்

2004 ஆம் ஆண்டில், Jorgsh Bush அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், Facebook தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. பின்னாளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, Digital  உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை "Thefacebook” என இதனைத் தொடங்கிய மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் Facemash.com என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, அதனை யாவரும் அணுகி, இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர். இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக, அப்போது Haward  பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை ஸக்கர் பெர்க் முடக்கினார் என்று ஒரு செய்தி அப்போது வெளியானது.
தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட Facebook தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் ஸக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார்.

Facebook பிறந்தது

2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர். ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். பின்னர், இந்த தளத் தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.

படங்களின் பதிவுகள் தொடங்கின

தொடக்கத்தில் Facebook இணைய தளத்தில் Photos அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 2005ல், ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு Photos மற்றும் படங்களை upload செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது. இன்று Facebook இணைய தளத்தில் Photos 'களே முக்கிய அம்சங்களாக உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2013 செப்டம்பரில், இத்தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் கோடியைத் தாண்டி யதாக அறிவிக்கப்பட்டது. நாள் தோறும் 35 கோடி படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.

அனைவருக்கும் அனுமதி

கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, Facebook இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து பதிந்து கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது. இதனால், 2006 ஆண்டு இறுதியில், பயனாளர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. அதற்கு முந்தைய ஆண்டில், இது 55 லட்சமாக மட்டுமே இருந்தது.

என் குறிக்கோள் பணம் அல்ல

 2006 செப்டம்பரில், Yahoo நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து, Facebook இணைய தளத்தினை வாங்க முன்வந்தது. Facebook இணைய தள நிறுவனத்தில் முதன் முதலில் முதலீடு செய்த பீட்டர் என்பவர், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். ஆனால், இதற்கென கூட்டப்பட்ட கூட்டத்தில், 22 வயது இளைஞரான ஸக்கர்பெர்க், "இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடியப்போகிறது. நாங்கள் எங்கள் இணையதளத்தை விற்கப் போவதில்லை” என அறிவித்தார். ஏனென் றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே ஸக்கர்பெர்க் கொண்டதில்லை. "இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன்” என்றார்.

செய்தித் தொகுப்பு

Facebook இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, Facebook தளத்தில் செய்திகள் தரப்பட்டன. உங்கள் சமூக வளைவில் என்ன நடக்கின்றன என்று தகவல்களைத் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால், தொடர்ந்து ஒரு நிகழ்வு சார்ந்து கிடைக்கும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனுடன் FacebookMiniFeed என்ற வசதியையும் கொடுத்தது. இதில் பயனாளர் ஒருவரின் சமூக செயல்பாடுகள் தொகுக்கப்பட்டன.

Programmers 'க்கு அனுமதி

 2007 ஆம் ஆண்டு மே 24 அன்று, Facebook தன்னுடைய Facebook Platform என்னும் மேடையை மக்களுக்கு வழங்கியது. இது, Facebook தளத்தில் இயங்கக் கூடிய புரோகிராம் களை மற்றவர்கள் தயாரித்து வழங்குவதற்கான மேடையாக அமைந்தது. தர்ட் பார்ட்டி Applications 'க்கு உதவி புரிய Facebook Markup Language என்னும் வசதியையும் இதனோடு அளித்தது. பல முக்கிய அப்ளி கேஷன்கள் Facebook தள செயல்பாட்டில் இணைந்தன.

லாபம் ஈட்டியது

நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, Facebook நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது. 2009ல், இந்நிறுவனம் பெற்ற வருமானம் 77.7 கோடி டாலர். இது 2008ல் பெற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. (சென்ற வாரம், Facebook தன் நான்காவது காலாண்டில் மட்டும் 206 கோடி dollors  விற்பனை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 63% கூடுதலாகும்.)

பங்கு வெளியீடு

 2012 ஆம் ஆண்டு மே மாதம், தன் பொதுப் பங்கு வெளியீட்டினை Facebook மேற்கொண்டது. இதன் மூலம் 1,600 கோடி dollors திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில், இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.

 100 கோடி பேர்

சென்ற 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 4ல், Facebook இணையதளத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, நூறு கோடி யைத் தாண்டியதாக, ஸக்கர்பெர்க் அறிவித்தார். ஏறத்தாழ, இந்தப் புவியில் வாழும் ஏழு பேரில் ஒருவர், Facebook பயனாளராக உள்ளனர். 100 கோடிப் பேரை, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வைத்து, நட்பு ரீதியாக இணைப்பது என்பது மிகப் பெரிய பணி என அடக்கத்துடன் ஸக்கர்பெர்க் கூறினார். என் வாழ்வில் இதுதான் நான் அதிகம் பெருமைப்படும் விஷயம் என்றும்  அறிவித்தார்

இந்தியாவைப் பொறுத்தவரை Facebook வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்துடனே காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இதில் செயல்படும் பயனாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாகும். இதில் 7 கோடியே 30 லட்சம் பேர், தங்கள் மொபைல் சாதனங் களில், Facebook தளத்தைப் பயன் படுத்துகின்றனர். இதனாலேயே, தன் mobile applications 'க்கு, இந்தியாவை ஒரு சோதனைத் தளமாக Facebook  கொண் டுள்ளது. 2008 ஆம் ஆண்டு வாக்கில்தான், இந்தியாவில் Facebook பயன்பாடு தொடங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பயனாளர் எண்ணிக்கை 10 கோடியை தற்போது நெருங்கிக் கொண்டி ருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், Facebook பயனாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உண்மையிலேயே Facebook தான் மாஸ் மீடியாவாக இயங்குகிறது. அதனால் தான், Colo cola, Airtel, Nestlay  இந்தியா போன்ற நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்திற்கு Facebook இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.

26 கோடியே 30 லட்சம் இணைய பயனாளர்களில், 9 கோடியே 30 லட்சம் பேர் Facebook தளத்தில் உள்ளனர் என்பது, இதற்கு நல்லதொரு பலம் தான். ஆனால், தற்போது பேஸ்புக் எந்த புதிய முயற்சியும் எடுக்காததால், பயனாளர்களிடம் சற்று சலிப்பு ஏற்பட்டுள் ளதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே, தொடர்ந்து தன் பயனாளர்களைத் தக்க வைத்து, அவர்களின் எண்ணிக் கையைப் பெருக்க வேண்டும் என்றால், பேஸ்புக் புதியதாக ஏதாவது செய்திட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி: தின மலர்