Home » » Microsoft Mathematics - இலவச உயர்தர கணிப்பான் மென்பொருள்

கணித கேள்விகளுக்கு செய்கை வழியுடன் விடைகளை தரும் இணைய சேவை பற்றி முன்பு இங்கு பார்த்திருந்தோம். அதே போல இல்லாவிடினும், ஓரளவு மேம்பட்டதாக Microsoft வழங்கும் இலவச மென்பொருள் தான் Microsoft Mathematics 4.0 இது பற்றி இணைய உலகில் பெரும்பாலானவர்கள் அறியவில்லை.  சாதாரணமாக Windows உடன் இணைந்து வரும் கணிப்பானை பயன்படுத்தி பழக்க பட்ட உங்களுக்கு நிச்சயம் இது மாறுதல் தான். இதில் அப்படி என்ன விசேடமாக இருக்கிறது, இதன் மூலம் என்னென்ன செய்யலாம்? இதை பெரும் வழிகள் என்ன? இப்பதிவில் தொடர்ந்து...
 Scientific Calculator இன்  தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இதன் interface மிக அழகாக உள்ளது. இதன் சிறப்பே அடிப்படை உயர்கணித கேள்விகளுக்கு செய்கை வழியுடன் விடை தருவதாகும்.

இதன் சிறப்புக்கள்:

  1. அடிப்படை தூய கணிதத்துக்கு செய்கைவழிக்கள் step by step ஆக கிடைப்பது.
  2. Graphs கூடவே அனைத்துக்கும் கிடைப்பது
  3. 3D, 2D வரைபுகள்
  4. algebra, trigonometry, physics, chemistry,   calculus என அனைத்து துறைகளையும் உள்ளடக்கி இருப்பது
  5. கையால் எழுதுவதை கூட புரிந்து கொண்டு விடைகளை தருவது
  6. மிக விரைவான கணித தர்க்கிப்பு 
  7. Microsoft தரும் இலவசங்களில் சிறப்பான ஒன்றே ஒன்று இம்மென்பொருள் தான்.

இதை பற்றி Microsoft குறிப்பிடுகையில்,


Microsoft Mathematics provides a set of mathematical tools that help students get school work done quickly and easily. With Microsoft Mathematics, students can learn to solve equations step-by-step while gaining a better understanding of fundamental concepts in pre-algebra, algebra, trigonometry, physics, chemistry, and calculus.

Microsoft Mathematics includes a full-featured graphing calculator that’s designed to work just like a handheld calculator. Additional math tools help you evaluate triangles, convert from one system of units to another, and solve systems of equations.



தரவிறக்கம் தொடர்பாக


இது இயங்க அடிப்படையாக processor 500 MHz , Memory 256 MB  இருப்பது போதும்.
இதை இறுதி பதிப்பு ஆகிய Microsoft Mathematics 4.0 இனை உங்கள் சிஸ்டத்துக்கு ஏற்றால் போல தரவிறக்கி கொள்ளுங்கள்.
  1. Microsoft Mathematics 4.0 x32 Bit  - Here 
  2. Microsoft Mathematics 4.0 x64 Bit - Here 
  3. Microsoft Mathematics Add-In for Word and OneNote:  Here

இதை நான் 4 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். இம் மென்பொருள் தொடர்பாக ஏற்கனேவே நான் பதிவிட்டதாகே எண்ணி இருந்தேன். நேற்று இதை பற்றி தேடிய போது தான் இன்னும் இந்த சிறப்பான மென்பொருளை பற்றி இன்னும் தமிழில் எவருமே எழுதவில்லை என்று தெரிந்தது. உடனடியாகவே எழுதி விட்டேன் இப்போது.