Home » » தொழில்நுட்ப துளிகள் - செய்திகள்

அண்மைக்காலத்தில் நிகழ்ந்த தொழிநுட்ப மாற்றங்கள் தொடர்பான செய்திகளை பகிர்கிறேன். அனைவரும் அறிந்த செய்திகளை தருவதை விட வெளிச்சத்துக்கு வராத சில செய்திகளையும் தருகிறேன்.

Twitter results in Google Search 


முன்பு Google, www.google.com/realtime என்ற இணைப்பின் மூலம் Twitter இல் பகிரப்படும் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டது. பின்னாளில் G+ அபிவிருத்தியில் மும்முரமாக இறங்கிய பின்னர் Twitter உடனான ஒப்பந்தத்தை முறித்தது. ஆனால் இப்போது மீண்டும் புதிய பக்கத்தில் அல்லாமல் வழமையான தேடல்களில் tweet களும் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு சமூக தளங்களும் தமக்கான தேடல் இயந்திரங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாலேயே இதை Google மீள ஆரம்பித்தி இருக்கலாம்.

Google Adsense இல் சில மாற்றங்கள்


  1. Google Adsense இல் உள்ள 2nd step verification முறை தற்போது இடை நிறுத்தப்பட்டு உள்ளது. முதல் தரத்தில் அனுமதி கிடைத்தாலே போதும். ஆனால் இது தொடர்பாக இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.
  2. முன்பை போல இல்லாமல் முதல்   Copyright strike  வந்தாலே   Youtube - Adsense  முடக்கப்படுகிறது.

Google Analytic இல் சில மாற்றங்கள்

  1. கடந்த வாரம் அடுத்தடுத்து இரு நாட்கள் Google Analytic இடை முகம் மாற்றப்பட்டு தரவுகளை இலகுவாக பெரும் வகையில் மீள வடிவமைத்து உள்ளார்கள்.
  2. Windows 8 இனை கண்காணித்து அறிவிக்கும் முறை மாற்றப்பட்டு உள்ளது. 
  3. Google Docs க்கு தரவேற்றும் வசதி இப்போது அனைவருக்கும் கிடைக்கிறது 
  4. Excel XSLX இனையும் ஆதரிக்கிறது.
  5. Geo map, Bar என புதிய இரு வரைபுகள் அறிமுகமாகியது.
Google Analytic க்கு போட்டியான Piwik தனது 1.10.1 பதிப்பை வெளியிட்டது. இதில் புதிய சில வசதிகள் அறிமுகமாகியது.

Metro User interface இணைய பக்கங்களிலும் 


Windows 8 இல் அறிமுகமாகிய Metro UI இப்போது இணைய பக்கங்களிலும் இடம் பெற ஆரம்பித்து உள்ளது. Touch screen  இல் இயங்கும் சாதனங்களில் இதுவே அவசியமாகிறது. எதிர் காலத்தில் கணணியை விட Tablet, smart phone போன்றவை அதிகம் பயன்படுத்தப்படும் என்பதாலே இப்போது Metro UI பிரபலம் ஆகிறது. http://metroui.org.ua/ இத்தளம் அனைத்து metro UI உதவிகளையும் இலவசமாக வழங்குகிறது. outlook.com, microsoft.com உட்பட பல தளங்கள் Metro UI இல் மாறி விட்டன.


(இந்ததளம் -கணணிக்கல்லூரியும் ஓரளவு Metro UI இல் மாற்றப்பட்டது. பூரணமாக மாற்ற இன்னும் சில காலம் தேவை..)

The Pirate Bay Documentary  தயாராகிறது


The Pirate Bay Documentary ஆனது February 8th at 17:00 CET அன்று  63rd Berlin International Film Festival  இல்  வெளியிடப்படுகிறது.  அதே நேரம் இணையத்திலும் இது இலவமாக வெளியிடப்படுகிறது. இதில்  Pirate Bay பற்றியும் இதன் தாபகர் பற்றியும் இதன் நடவடிக்கைகள், எதிர்ப்புக்கள் பற்றியும் காணலாம். இதன் முன்னோட்டம்  இதோ :