Home » » எது நல்லது Scientific Calculators?

பொதுவாக  Engineering பிரிவில் இருக்கும் மாணவர்களுக்கு அவசியமான ஒன்று தான் scientific calculators. ஆனால் இதில் பல வகைகள் உண்டு. எதை வாங்குவது? எதை வாங்க வேண்டும்? என்ன வேறுபாடுகள் உண்டு? இவற்றை பற்றி சிறு பதிவு. நீண்ட நாட்களாக எதுவும் எழுதவில்லை. பலருக்கும் பயன் படுமே என்று இப்பதிவு.



பொதுவாக scientific calculators என்றவுடன் ஞாபகம் வருவது Casio தான். என்னதான் இணையம் , Computing Engines இருந்தாலும் scientific calculators போல எதுவும் வராது. அழகாக அடுக்கப்பட்ட buttons வரிசை, solar power, கைக்கு அடக்கமான தன்மை. உடையாது.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனாலும் 2002 களில் வந்த Casio scientific calculators இனை தான் இப்போதும் கடையில் சிறப்பானது என சொல்லி விற்கிறார்கள்.

சிறப்பு வசதிகள்

இப்போது - அதாவது 2009 களின் பின்னர் வரும்  scientific calculators இல் Vectors கணித செய்கைகள், Matrix functions உள்ளடக்கப்பட்டு உள்ளது. நிச்சயம் பொறியியல் மாணவர்களுக்கு இது தேவையான ஒன்று. 

உதாரணாமாக Matrix A = [2 3 5, 2 3 4, 1 1 1] எனில் A^3 இனை பரீட்சையில் எழுதி காட்ட வேண்டிய தேவை இல்லை. நேரடியாக scientific calculators மூலம் கொடுக்கலாம். ஆனால் இன்றுவரை scientific calculators இல் உள்ள இந்த function இனை பயன்படுத்தும் நண்பர்கள் மிக குறைவு. பலரின் scientific calculators இல் இவை இல்லை. இருந்தாலும் அதை இயக்கி பார்ப்பது இல்லை.

இப்போதெல்லாம் Text book input முறைக்கு உரிய scientific calculators அதிகம் கடைகளில் கிடைக்கிறது. அதாவது எழுதுவது போலவே input செய்யும் வசதி.

Equation solving அண்மைக்காலங்களில் அறிமுகமான வசதி. X^3 வரை தீர்க்க முடியும்.

விலை

பொதுவாக இலங்கையில் 2000.00 க்குள் வாங்க முடியும். அதாவது $15.  Ebay இல் நல்லவற்றை தேர்ந்து எடுத்து வாங்க முடியும்.

தரம் 

தரம் தான் scientific calculators இல் முக்கியம். சில போலிகள் மலிவாக கிடைத்தாலும் (China Phone போல ) இயங்குவதில்லை. Solar system இயங்காது. Display connector cable கழன்று விடும். 

பொதுவாக அதன் OS தரத்தை தீர்மானிக்க சில சிக்கலான Solving முறைகளை அளிக்கும் போது scientific calculators தடுமாறுவதை கொண்டு போலியை இனம் காணலாம். பொதுவாக இப்படியான சந்தர்ப்பங்களில்  scientific calculators போலி எனில் அப்படியே உறையும். Casio தயாரிப்பு எனில் Timeout Error அல்லது பொருத்தமான விடையை காட்சிப்படுத்தும்.

பொருத்தமான சில வகைகள்

பல வர்ணங்களில் - பஞ்சு முட்டாய் வர்ணம், நீலம், கருப்பு, வெள்ளை என பல...
  • fx 991ES
  • fx 991ms (Battery model)
  • FX-991ESPLUS
  • FX-85GTPLUS-PK
எவ்வாறாயினும் இவற்றை பயன்படுத்த கற்று வைத்திருங்கள்..