இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு Android Smart போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும்.
நீங்கள் iPhone பயன்படுத்திய அனுபவம் உள்ளவர் என்றால் Find My iPhone சேவையை ஒத்த தன்மையை இதில் காண முடியும்.
முதலில் பின்வரும் option பகுதிக்கு செல்லுங்கள்.
- Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.
- அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்கு Samsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.
- இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை , பிள்ளைகள் பயன்படுத்தினாலோ அது இருக்கும் இடம், பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல் (call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய செய்து கொள்ளலாம்.
http://findmymobile.samsung.com இந்த இணையதள முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account User Name மற்றும் Password ஐ கொடுக்கவும்.
அதில் கீழ்ண்டவாறு உங்கள் தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும் .
இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்
- Locate My Mobile – இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருக்கும் இடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்தது என்ற விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்
- Lock My Mobile- இதன் மூலம் கணிணி மூலமே உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.
- Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.
- Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் receive ஆன அழைப்புகளின் தகவல்களை பெறலாம்
- Wipe My Mobile- நீங்கள் செமித்து வைத்த தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் வேலைகளை செய்து கொள்ளலாம்.
இதே வசதியை பல Apps தருகிறன. ஆனால் அவற்றில் தன்னியக்கமாக GPS இனை On செய்யும் வசதி பெரும்பாலும் இல்லை. ஆனால் Samsung இன் இந்த சேவையில் அதற்கு பூரண அனுமதி உள்ளது. எனவே நீங்கள் GPS இனை Off செய்து இருந்தாலும் தானாக On செய்யப்பட்டு உங்கள் இருப்பிட தகவல்கள் திரட்டப்படும்.
நன்றி: அப்படியா. COM