
இப்பதிவு அனைவராலும் பயன்படுத்தப்படும் VLC media player இனை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
உபதலைப்பு என்றால் என்ன?

- சில சமயங்களில் இவை காணொளியாக பதியப்பட்டு இருக்கும். இதை மாற்றவோ மறைக்கவோ முடியாது.
- பல சமயங்களில் .avi, .mp4 போன்ற காணொளி வகைகளுடன் இவை உள்ளே இணைக்கப்பட்டு இருக்கும். கணனியில் பிளேயர் மூலம் கட்டு படுத்தலாம்.
- பொதுவாக தனியான ஒரு file ஆக இருக்கும். .srt முடிவுடன் இருக்கும் இவையே இணையத்தில் இருந்து எம்மால் தரவிறக்கி பயனடுத்த முடியும்
உபதலைப்புகளை எங்கே பெறலாம்?
- இவை Torrent இல் பிரபல uploader களின் upload களை பெரும் போது கூடவே .srt என வடிவில் வரும்.
- Google இல் தேடினால் இலகுவாக கிடைக்கும். (Eg: Subtitle download """""'Red Down" English)
- பிரபலமான சில தளங்கள்: www.opensubtitles.org , subscene.com , subtitlesbank.com . இவற்றில் தேடி அதிக download hits உள்ளவற்றை தரவிறக்கலாம்.
உபதலைப்புக்களை எப்படி திரைப்படத்துடன் இணைப்பது
(on VLC player) ?
Video >> Subtitles Track >> Open >> இவ்வாறு சென்று பொருத்தமான subtitle அடங்கிய file இனை தெரிவு செய்யுங்கள்.
(உயர் தர படங்களில் இவ்வாறு குரல்களை கூட மாற்ற முடியும். உதாரணம், Avatar படத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் காண முடியும். இதை Audio >> Audio Track பகுதியில் [இருந்தால்] மாற்ற முடியும். )
இதன் போது ஏற்பாடும் பொதுவான பிழைகள் என்ன?
- வாய் அசைவுக்கு முன் / பின் குரல் ஒலித்தல்
- இவ்வாறே Sub titles தோன்ற நேர வேறுபாடு எடுத்தல்
இவ்வாறான பிழைகள் வர காரணம்?
- Video Decode இல் ஏற்பாடும் பிழைகள்
- Movie குறிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரத்தை கொண்டு இருத்தல் (விளம்பரங்கள்)
- Sub title இல் பதிவு செய்தவரின் பிழைகள்.
இதை எப்படி சரி செய்வது (on VLC)?
Tools >> Track Synchronization இல் Subtitle திரையிடப்படும் அல்லது குரல் ஒலிக்கும் நேரத்தை முன் / பின்னாக மாற்ற முடியும்.


தமிழ் உபதலைப்புக்களை எங்காவது பெற வழிகள் இருக்கிறதா? பகிர்ந்து கொள்ளுங்கள்.